தமிழில் ‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’, ‘பார்கிங்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் Harish Kalyan. இன்று பிறந்தநாள் காணும் அவரின் அடுத்த படங்களின் அப்டேட்கள் கிடைத்துள்ளது.

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம் ‘டீசல்’. இதன் போஸ்டரை இன்று வெளியிட்டது படக்குழு. தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் அதுல்யா ரவி உடன் நடிக்கிறார் Harish Kalyan. நடிகர் வினய் மற்றும் யோகி பாபு இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
Idho ungal #Anbu
— Harish Kalyan (@iamharishkalyan) June 29, 2024
This one is for you all 🙂
Thanks to my team ❤️#LubberPandhu @lakku76 @venkatavmedia @Prince_Pictures #AttakathiDinesh @tamizh018 @isanjkayy #Swasika @kaaliactor @bala_actor @RSeanRoldan @DKP_DOP @johnmediamanagr @SonyMusicSouth pic.twitter.com/ho31FpGNyS
ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ‘வதந்தி’ வெப் சீரிஸ் நடிகை சஞ்சனா, சுவாசிகா நடிப்பில் உருவான படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட் கதையாக அமைந்துள்ள படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது. இதில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் ஹரீஷ் கல்யாண். அதை ஒரு வீடியோ வழியாக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். CSK கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகனாக இந்த படத்தில் நடிக்கும் ஹரீஷ் கல்யாண் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
சமீபத்தில் வெளியான ‘ஸ்டார்’ படத்தில் நடிக்க இருந்து அதில் இருந்து Harish Kalyan விலகினார். அவர் நடித்த ‘பார்கிங்’ படத்தின் திரைக்கதையை ஆஸ்கர் அகாதமி நூலகத்தில் நிரந்தரமாக சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com