Home Cinema News பார்ட் 2-வுக்கு ஸ்கெட்ச் போடும் ‘பார்க்கிங்’ படக்குழுவினர்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

பார்ட் 2-வுக்கு ஸ்கெட்ச் போடும் ‘பார்க்கிங்’ படக்குழுவினர்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

by Sivaanantham RB

தமிழில் கடந்த 2023-ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான படம் ‘பார்க்கிங்’. ஹரிஷ் கல்யாண் – ‘பிகில்’ புகழ் இந்துஜா ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். 

இதில் பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக சென்று ஆடியன்ஸை சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைத்தது.

பெரிய ஹீரோ, மெகா பட்ஜெட் தேவையில்லை, நல்ல கதை ப்ளஸ் சுவாரஸ்யமான திரைக்கதை இருந்தால் போதும் சின்ன படம் கூட மிகப் பெரிய வெற்றிபெறும் என்பதற்கு ‘பார்க்கிங்’ ஒரு சிறந்த உதாரணம்.

தற்போது, இந்த படத்தின் பார்ட் 2-வுக்கான ஸ்க்ரிப்ட் வொர்க் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பெரிய பட்ஜெட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மிக விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.