Home Cinema News ரோஹித் ஷர்மாவா நான்? – ஆஸ்திரேலிய ரசிகரால் அதிர்ச்சியான HIPHOP AADHI!

ரோஹித் ஷர்மாவா நான்? – ஆஸ்திரேலிய ரசிகரால் அதிர்ச்சியான HIPHOP AADHI!

நடிகர் ஹிப் ஹாப் ஆதியை இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் ஷர்மா என நினைத்து ஆஸ்திரேலியா ரசிகர் ஒருவர் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கும் சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

by Sruthi Balasubramanian

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் HIPHOP AADHI. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிடி சார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி சமீபத்தில் லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவரைக் கண்ட ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் வேகமாக ஓடி வந்து HIPHOP AADHI கட்டி அணைத்து கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். 

HipHop Aadhi

பிறகு அவர் ஹிப் ஹாப் ஆதியிடம் ‘’T20 உலகக்கோப்பையை வென்றதற்கு என்னுடைய வாழ்த்துகள்’’ எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு குழம்பிப்போன ஹிப் ஹாப் ஆதி அந்த நபரிடம் ‘’எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் ‘’நீங்கள் ரோஹித் ஷர்மாதானே?’’  எனக் கேட்டு ஹிப் ஹாப் ஆதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். 

அதன் பிறகு அந்த நபரிடம் சிரித்துக்கொண்டே ‘’நான் ரோஹித் ஷர்மா இல்லை… நான் இந்தியாவை சேர்ந்த ஒரு இசையமைப்பாளர்’’ என்று கூறி விளக்கம் அளித்த ஹிப் ஹாப் ஆதி அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.