ஹிப் ஹாப் rapper ஆக தனது இசை பயணத்தை தொடங்கிய HipHop Adhi அதன் பிறகு பல ஆல்பம் பாடல்கள் வெளியிட்டுள்ளார். “டக்கரு டக்கரு, கிளப்ல மப்புல, வாடி புள்ள வாடி, இறைவா” போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள் ஆகும். 2013-ஆம் ஆண்டு “The Smurfs 2” என்ற ஆங்கில படத்திற்காக “Na Na Na (Nice vs Naughty)” என்னும் பாடலை இசையமைத்துள்ளார். அடுத்ததாக பின்னணி பாடகராக விஜய் ஆண்டனி, அனிருத், சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசையில் பாடியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு “ஆம்பள” படத்தில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தடம் பதித்தார். பின், அவரே இயக்கி, நடித்த “மீசைய முறுக்கு” படத்தின் மூலம் இயக்குனர், தொகுப்பாளர், நடிகர் என்ற புது அவதாரங்களையும் எடுத்து அதில் தனது தனித்துவத்தை வெளிக்காட்டினார். தனது இசை பயணத்தின் முன்னோடியாக அவர் கருதுவது “மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஜாக்-கே” ஆவர்.
கான்செர்ட் கலாச்சாரம் மறுபடியும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதால் எல்லா இசை அமைப்பாளர்களும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அவர்களின் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் ஹிப் ஹாப் ஆதி பல நாள் கழித்து இங்கிலாந்து, மலேசியாவில் ஆகஸ்ட் மாதம் கான்செர்ட் நடத்தினார். அதன் பிறகு “ஹிப் ஹாப் தமிழா world tour, Return of the Dragon” என்ற தலைப்பில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது, இதை குறித்த ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. செப்டம்பர் 8 ஆம் தேதி கோயம்பத்தூரில் உள்ள பீளமேட்டில் உள்ள Codissia மைதானத்தில் மாலை 6.30 மணி முதல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 21 மாலை 4 மணி முதல் சென்னை YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ராஜ் மெலோடிஸ் மற்றும் Torque entertainment என்ற event management நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றனர். கான்சட்டுக்கான டிக்கெட் முன்பதிவை ஹிப் ஹாப் events என்ற இணையதளத்தில் செய்துகொள்ளலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]