Home Cinema News  PT SIR-ஆக அவதாரம் எடுத்த “hiphop Tamizha” ஆதி…

 PT SIR-ஆக அவதாரம் எடுத்த “hiphop Tamizha” ஆதி…

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்களுள் hiphop ஆதியும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வரவுள்ள PT SIR படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

by Sudhakaran Eswaran

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்களுள் hiphop tamizha ஆதியும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வரவுள்ள PT SIR படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

இசையில் கலக்கிக்கொண்டிருந்த hiphop ஆதி “மீசைய முறுக்கு” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து  ரசிக்கும்படியான படங்களில் நடித்து வந்த ஆதி தற்போது PT SIR-ஆக அவதாரம் எடுத்துள்ளார். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில்,  வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிப்பில்  மே 24-ல் படம் வெளியாகவுள்ளது. hiphop ஆதி குழு இசையமைக்கும் 25-வது படமாகும். 

Untitled design 2 5

இந்த படத்தில் hiphop ஆதி, காஷ்மிரா பர்தேசி, தியாகராஜன், முனீஷ்காந்த், அனிகா சுரேந்திரன், பாண்டியராஜ் போன்றோர் நடித்துள்ளார். பள்ளியில் pt sir-ஆக இருக்கும் ஆதி மாணவர்கள் ரசிக்கும் sir ஆக இருந்து வருகிறார். காமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் விதமாக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி அதை அறிந்த ஆதி மாணவிக்கு ஆதரவாக செய்யும் சட்டப்படியான நடவடிக்கைகள் என படத்தை விறுவிறுப்பாக எடுத்திருப்பார்.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.