ஒவ்வொரு ஆண்டும் IIFA விருது வழங்கு விழா, இந்திய திரைத்துறை திறமைகளை கவுரவிக்கும் நிகழ்வாக நடந்துவருகிறது. கடந்த மூன்று வருடங்களாக தென்னிந்திய மொழி திரைத்துறையினரை அங்கீகரிக்க IIFA உத்சவம் விருதுகள் தொடங்கப்பட்டது.
2024ல் மூன்றாவது முறையாக IIIFA Utsavam Awards 2024 நடைபெறவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 27ம் தேதி அபு தாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெறுகிறது. அதில் நான்கு தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னம், மலையாளம் மொழி திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்தாண்டிற்கான விருதுகளை பெறப்போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை நன்கு மொழியிலும் தொகுத்து வழங்கிட பிரபலமான நபர்களை தேர்ந்தெடுத்து, அதை ஒளிபரப்புவார்கள். அப்படி இந்த ஆண்டு தமிழில் தொகுத்துவழங்க நடிகர் சதிஷ் மற்றும் தொகுப்பாளினி தியா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு மொழியில் நடிகர் ராணா டகுபதி மற்றும் இளம் நடிகர் தேஜா சஜ்ஜா வழங்கவுள்ளார், அதேபோல் மலையாளத்தில் சுதேவ் நாயர் மற்றும் பேர்லே மானே தொகுத்து வழங்குகிறார்கள். கன்னடத்தில் நடிகர் அக்குள் பாலாஜி மற்றும் நடிகர் விஜய் ராகவேந்திரா தொகுக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
IIFA உத்சவம் விருதுகள் 2024ல் கலந்துகொள்ளும் பிரபலங்கள்
தமிழ் பிரபலங்கள் |
---|
இயக்குனர் மணிரத்னம் |
சுஹாசினி மணிரத்னம் |
நடிகர் கமல் ஹாசன் |
இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் |
நடிகர் சியான் விக்ரம் |
நடிகை ஐஸ்வர்யா ராய் |
நடிகை த்ரிஷா கிருஷ்ணன் |
நடிகை சமந்தா |
நடிகர் சிலம்பரசன் |
நடிகர் சிவா கார்த்திகேயன் |
நடிகர் எஸ் ஜெ சூர்யா |
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் |
கலை இயக்குனர் தோட்டா தரணி |
69வது தென்னிந்திய Filmfare விருதுகள் 2024 – வெற்றியாளர்கள் பட்டியல்!
தெலுங்கு பிரபலங்கள் |
---|
மெகாஸ்டார் சிரஞ்சீவி |
நடிகர் ராம் சரண் |
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா |
மலையாள பிரபலங்கள் |
---|
நடிகர் நிவின் பாலி |
ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி |
கன்னட பிரபலங்கள் |
---|
நடிகர் ரிஷப் ஷெட்டி |
நடிகர் தர்ஷன் |
விருதுகள் வழங்குவதற்கு இடையில் கலை நிகழ்ச்சிகள் நடப்பதும் வழக்கம். அப்படி இந்தாண்டு நடிகர் மற்றும் நாடன் கலைஞர் பிரபு தேவா, நடிகை ராஷி கண்ணா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகை ரெஜினா கேசான்ட்ரா, நடிகர் ஷேன் நிகாம், நடிகை ப்ரகியா ஜெய்ஸ்வால், நடிகை ஆராதனா மற்றும் நடிகை மலஸ்ரீ ஆகியோர் மேடையில் ஆடி, பாடவுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]