படத்தின் வெற்றிக்கு காரணமான “கண்மணி அன்போடு காதலன்”பாடலால் Manjummel Boys படக்குழுவிற்கு எழுந்த புதிய பிரச்சனை…
அண்மையில் மலையாள மொழியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற படம் Manjummel Boys. எதிர்பாராத வசூல் செய்து தமிழ் ரசிகர்களால் அதிகம் கொண்டாட பட்ட படம். மஞ்சுமல் பகுதியில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா வரும் இளைஞர்களில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவரை காப்பாற்ற நண்பர்கள் எடுக்கும் முயற்சி என படத்தை ரசிக்கும் படி எடுத்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு குணா குகையை காண கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூட அதிகரித்தது.

படத்தின் தொடக்கத்திலேயே குணா படத்தின் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் கொண்டு கதை ஆரம்பமாகிறது. இந்த படத்திற்கு பிறகு whatsapp status, insta story, reels என அனைவரும் இந்த பாடலை கொண்டாடி வந்தனர். படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். குணா படத்தின் பாடலை இளையராஜா இசையமைத்திருந்தார்.

படம் வெளியாகி 2 மாதத்திற்கும் மேல் ஆனா நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் எனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தப்பட்டதாக மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் விடுத்துள்ளார்.
அனுமதி பெறாமல் பயன் படுத்தியதற்காக உரியஇழப்பீட்டையும் வழங்க வேண்டும் அல்லது படத்திலிருந்து பாடலை நீக்க வேண்டும். இழப்பீட்டை வழங்காவிட்டால் பதிப்புரிமையை வேண்டும் என்றே மீறியதாக கருதில் கொண்டு உரிமையியல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் இளையராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பியதில் என்ன செய்ய போகிறார்கள் என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]