தன்னுடைய இணையில்லா இசை ஞானத்தால் உலக அளவில் ரசிகர்களை சேகரித்துள்ள இசைஞானி இளையராஜா அடுத்தாக லண்டனில் இசை கச்சேரி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். பல நாடுகளில் பல அண்டுகளாக இசைக்கச்சேரிகள் நடத்திய இளையராஜாவின் இந்த கச்சேரி தனித்துவமாக பேசப்படக் காரணம், இதுவே அவர் முதல் முறையாக தன்னுடைய Symphony Orchestra குழுவுடன் நேரலையில் கச்சேரி அரங்கேற்றப் போகும் முதல் கச்சேரி ஆகும்.
மலையாள பாடகரும் இளையராஜாவின் இசையில் பல பாடல்களுக்கு தன்னுடைய காந்தக் குரலை வழங்கிய பாடகர் யேசுதாஸ் அவர்களின் கேரிக்கையின் பேரில் முதல் முறையாக தன்னுடைய Symphony இசைக் குழுவுடன் ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்க முடிவெடுத்துள்ளார் இளையராஜா. இதனை ஒரு வீடியோ பதிலாக வெளியிட்டதையடுத்து இன்று லண்டனில் வரும் 2025 மார்ச் மாதம் கச்சேரி நடப்பதை அறிவித்துள்ளார்.
‘இளையராஜா Debut’ என்ற பெயரில் இந்த கச்சேரி நடக்கிறது. அதில் Symphony Number 1: Valiant, முழுமையாக சிம்ஃபனி குழு இசைக் குழுவுடன் வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இதுவரை இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் கச்சேரிக்கு திரளான ரசிகர்கள் வருவது வழக்கமாகும். அதேபோல் லண்டனில் நடக்கவிருக்கும் கச்சேரிக்கு முன்பதிவு முதலே ஆர்வம் காட்ட தொடங்கிவிடுவார்கள் ரசிகர்கள்.
Ilayaraja Symphony Orchestra தேதி, டிக்கெட் விவரங்கள்
கச்சேரி நடக்கும் இடம் – Eventim Apollo, London
நாள் – மார்ச் 8, 2025 (சனிக்கிழமை)
முன்பதிவு ஆரம்பம் – டிசம்பர் 18, 2024
பொது பதிவு ஆரம்பம் – டிசம்பர் 20, 2024