சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ‘கூலி’. இந்தப்படத்துக்கான டீசர் மற்றும் ‘கூலி டிஸ்கோ’ என பின்னணிப் இசையுடன் கூடல் பாடல் ஒன்றையும் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப்பாடலில் ரஜினிகாந்த்தின் பழையபடமான ‘தங்கமகன்’ படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த ”வா வா பக்கம் வா” என்கிற பாடலின் பின்னணி இசையை பயன்படுத்தியிருந்தார்கள்.
யு-ட்யூபில் ‘கூலி டிஸ்கோ’ வெளியிட்டபோது அதன் கிரெடிட்ஸில் ”Vaa Vaa Pakkam Vaa Originally Composed by Maestro Ilaiyaraaja” என குறிப்பிட்டப்பட்டிருந்தது. ஆனால், இளையராஜாவின் நோட்டீஸுக்குப்பிறகுதான் இதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்கிற விவரம் தெரியவந்திருக்கிறது.
சட்டப்படி காப்பிரைட்ஸ் வாங்கவேண்டும், இல்லையென்றால் ‘கூலி’ பட சம்பந்தப்பட்ட எல்லோர் மீதும் வழக்குத்தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் இளையராஜா.
‘கூலி’யால் இளையராஜாவுக்கும், ரஜினிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]