Home Cinema News Indian 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை- இயக்குனர் சங்கர் அதிரடி தகவல்! 

Indian 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை- இயக்குனர் சங்கர் அதிரடி தகவல்! 

நட்சத்திர பட்டாளத்தை கொண்ட Indian 2 படத்தில் முன்னணி நடிகை காஜல் அகர்வாலின் காட்சிகள் இல்லை என இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கர் அறிவிப்பு. 

by Vinodhini Kumar

நட்சத்திர பட்டாளத்தை கொண்ட Indian 2 படத்தில் முன்னணி நடிகை காஜல் அகர்வாலின் காட்சிகள் இல்லை என இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கர் அறிவிப்பு. 

Indian 2 படம் 2024ன் அதிகம் பேசப்படும் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் கமல் ஹாசன், நடிகர் சித்தார்த், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Indian 2 Poster

இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கர் பேசும்போது, Indian 2 படத்தில் நடிகை காஜல் அகர்வாலின் காட்சிகள் இடம் பெறாது என்றும், அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு அது இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தில் தான் வெளியாகும் என்றும் அறிவித்தார். நடிகை காஜல் அகர்வால் பின்னர் இந்த படத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் உடன் வேலை செய்த்து மிக்க மகிழ்ச்சி என்றும் கூறினார். 

Kajal Agarwal

இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் இல்லை என்ற தகவல் அவரின் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், உலக நாயகன் கமல் ஹாசனின் ரசிகர்களுக்கு இந்தியன் படத்தின் மற்றுமொரு பாகம் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கும். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல பிறமொழி நடிகர்களை ஒருங்கிணைத்து இந்தியன் 2 படத்தில் இயக்கி உள்ளார் இயக்குனர் சங்கர். 

முக்கியமாக இந்தியன் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை. முதல் பாகத்தின் பாடல்களை மீம்களாக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். இந்தியன் 2 படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கரின் காட்சிகளும், சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் காட்சிகளும் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.