Home Cinema News இந்தியன் 2 படத்தை விட 3ம் பாகத்திற்கு ஆவலாக உள்ளேன்! – அதிரடி பேச்சுக்கு பதிலளித்தார் கமல் ஹாசன் 

இந்தியன் 2 படத்தை விட 3ம் பாகத்திற்கு ஆவலாக உள்ளேன்! – அதிரடி பேச்சுக்கு பதிலளித்தார் கமல் ஹாசன் 

இந்தியன் 2 புரொமோஷன் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அடுத்தடுத்த சர்ச்சை பேச்சால் வைனலாகி வருகிறார். அதற்கு பதிலளித்துள்ளது படக்குழு‌. 

by Vinodhini Kumar

Indian 2 படம் வரும் ஜூலை 12 வெளியாக உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பயணித்து தினமும் புரொமோஷன் செய்து வருகின்றனர். இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் ஹாசன், சித்தார்த் ஆகியோர் பல இடங்களில் இந்தியன் 2 படத்தை பற்றியும் அதில் கூறப்படும் கருத்துக்கள் பற்றியும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். 

Kamal in இந்தியன் 2 promotions

கமல் ஹாசன் சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் இந்தியன் 3 படத்தை பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர், இந்தியன் 3 படத்தின் கதைக்கு தான் ஆர்வமாக உள்ளதாகவும், இந்தியன் 2ஐ விட இந்தியன் 3 தான் எனக்கு பிடித்தது என்று கூறினார். இதனால் வலைதளங்களில் ஏற்கனவே கலாய்க்கப்பட்ட இந்தியன் 2 படத்துக்கு மேலும் சர்ச்சை கிளம்பியது. டிரெய்லர் வெளியாகி பெரிதாக ரசிகர்களை ஈர்க்காததும் கமல் ஹாசனின் அதிரடி பேச்சும் பல மீம்களுக்கு தீனியாக அமைந்தது. 

இதற்கிடையில் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்தர் பற்றி கமலின் கருத்தும் பலரை மகிழ்விக்வில்லை. படத்தின் இசை பற்றி கேட்ட கேள்விக்கு நடிகர் கமல் ஹாசன் தனக்கு இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மான் தான் பிடிக்கும். தான் அவர்களுடைய ரசிகன் என்றும், அனிரூத்தை இந்த படத்தில் சேர்த்தது முற்றிலும் இயக்குனர் ஷங்கருடைய முடிவு தான் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பினார். 

Kamal and Siddharth Indian 2

இதற்கு பதிலளித்த இயக்குனர் ஷங்கர், ஏ ஆர் ரஹ்மான் இந்தியன் 2 படத்தை கேட்ட போது மற்றொரு படத்தில் பிசியாக இருந்ததார் என்றும், இளம் இசையமைப்பாளர்கள் உடன் பணியாற்ற எனக்கு விருப்பம் தான் என்றும் கூறி சம்பாதித்து விட்டார். இப்படி பல கருத்துக்களலால் கமல் ஹாசன் குழப்பத்தை ஏற்படுத்த, மற்றொரு பக்கம் நடிகர் சித்தார்த் சமீபத்தில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்ததை சுற்றிக் காட்டி இந்த கால இளைஞர்களுக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது என கூறினார். இதற்கு வலைதளங்களில் 10 வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டுக்கு எதிராக சித்தார்த் பேசிய வீடியோவை பரப்பி வருகின்றனர். 

தொடர்ச்சியாக புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கு பெருவதாலும், பல கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வெளியாகும் போது, மக்களிடம் இருந்து பின்னடைவு கிடைப்பதாலும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள் இந்தியன் 2 படக்குழு. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.