Home Cinema News இந்தியன்- 2 ட்ரெய்லர்… அப்செட்டில் கமல்!

இந்தியன்- 2 ட்ரெய்லர்… அப்செட்டில் கமல்!

இந்தியன்- 2 ட்ரைலருக்கு நெகடிவ் ரெஸ்பான்ஸ் வர கமல் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அப்செட்.

by Sruthi Balasubramanian

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து, ஜூலை 12 ரிலீஸுக்குத் தயாராகியிருக்கும் ‘இந்தியன்- 2’ படத்தின் ட்ரெய்லர் June 25 வெளியானது. ட்ரெய்லர் வெளியீட்டு செய்தியாளர் சந்திப்பு காலை சென்னையிலும், இரவு மும்பையிலும் நடந்தது. 

இந்தியன்- 2 poster

சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் ‘’ட்ரெய்லர் எப்படி இருந்தது’’ எனக்கேட்ட கமலுக்கு நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் வர, ‘’நைட்டு ஏழு மணிக்கு மக்கள் பார்த்துட்டு சொல்லட்டும்’’ என சொல்லிவிட்டு மும்பை கிளம்பிவிட்டார் கமல். ஆனால், இரவு 7 மணிக்கு ட்ரெய்லர் வெளியானதில் இருந்து வந்த யூ-ட்யூப் கமென்ட்ஸிலேயே 70 சதவிகித கமெண்ட்ஸ் நெகட்டிவாக இருக்க கமல்ஹாசன் பயங்கர அப்செட்டாம். ஷங்கரும் கமல்ஹாசனிடம் ரெஸ்பான்ஸ் குறித்துப் பேச, ‘’ட்ரெய்லர்ல வேற என்னவோ எதிர்பார்த்திருக்காங்க… படம் ரிலீஸான படத்தைக் கொண்டாடுவாங்க’’ எனச்சொல்லி ஷங்கரை ஆறுதல் படுத்தியிருக்க்கிறார் கமல்.

இந்தியன்- 2 director and actor

லைகா நிறுவனமோ ‘இந்தியன் -2’வுக்கே நிலைமைன்னா, ‘இந்தியன் -3’-ஐ என்ன செய்வது என்ற கவலையில் இருக்கிறது!

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.