நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் வெற்றி முகம் கொண்ட தமிழ் சினிமாவின் தங்கமகன் dhanush. சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோடியில் ஒரு ரசிகனாக இருந்து தனது திறமையால் அவருக்கு மாப்பிள்ளையாக மாறினார்.

ஒல்லியான உடல், திமிரான பார்வை, சத்தமான பேச்சு என தன்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திக்கொண்டார் dhanush. முதல் படத்தில் 16 வயதில் அப்பா இயக்க, அண்ணன் கதை எழுதி தனுஷ் நடித்த படம் துள்ளுவதோ இளமை. முதல் படமே தனுஷ்க்கு எதிர்பார்த்த வெற்றியை தந்தது. அதை அடுத்து இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் செல்வராகவன். கிளைமேக்ஸ் காட்சியில் “திவ்யா திவ்யா” என்று பேசும் வசனம் ரசிக்கும்படியாக இருந்தது. இதில் தனுஷ் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. உருவ கேலி செய்தவர்கள் dhanush நடிப்பை ஆச்சரியமாக பார்த்தனர். சினிமாவில் ஜெயிக்க நடிப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு இருந்தவர் தனுஷ்.
1983-ல் கஸ்தூரி ராஜா, விஜயலக்ஷ்மி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் dhanush. தனது சிறு வயதில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து சிறந்த செஃப் ஆக என்று ஆசைப்பட்டார். பின்னாளில் தனது அண்ணன் மற்றும் தந்தைக்காக நடிப்பில் கவனம் செலுத்தினார். தனுஷ் அவரின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. கமல் நடிப்பில் வெளியான குருதிப்புனல் படத்தில் கமல்ஹாசன் “ஆபரேஷன் தனுஷ்” என்று ஒரு செயலுக்காக பெயர் வைத்திருப்பார். அதன் மீது கொண்ட ஈர்ப்பால் பின்னர் தனது பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டார்.
திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை என தொடர்ந்து ரசிக்கும் படியான படங்களில் நடித்து வந்தார். 2007-ஆம் ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படம் தனுஷ்க்கு பெரும் வெற்றியை தந்தது. அதன் பின்னர் அவரின் படங்கள் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி படம் ஹிட் அடிக்க தனெக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக்கொண்டார். எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா, சிம்பு-தனுஷ் என தமிழ் சினிமாவில் அந்தந்த காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட நடிகர்கள் வரிசையில் இடம் பெற்றார் தனுஷ்.
2011-ல் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான ஆடுகளம் படம் தனுஷ் நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் வட சென்னை, அசுரன் படங்கள் பிளாக் பாஸ்டர் ஹிட் தந்தது. இயக்குனர் வேல்ராஜ் அவர்களின் முதல் படமான வேலையில்லா பட்டதாரி படம் 2014-ல் வெளியானது. படித்து முடித்த இளைஞர்களின் ஏக்கத்தையும், சாதிக்க துடிக்கும் எண்ணத்தையும், கனவையும் கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருப்பார் இயக்குனர். இளைஞர்கள் மத்தியில் இன்றளவும் ரசிக்கும்படியான படமாக இருந்து வருகிறது. மேலும் பாலிவுட், ஹாலிவுட் என 4,5 படங்களில் நடித்துள்ளார்.
நடிக்க தொடங்கிய ஆரம்பகாலம் முதலே பாட்டு பாடுவதிலும் கவனம் செலுத்தினார். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் “நாட்டு சரக்கு” பாடல், தேவதையை கண்டேன் படத்தில் ” துண்டை காணோம்” பாடல், புதுப்பேட்டை படத்தில் “எங்க ஏரியா” பாடல், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ” உன் மேல ஆசைதா” பாடல் என பாடிய பாடல்கள் அனைவரையும் குத்தாட்டம் போடா வைத்தது. 2011-ல் அனிரூத், தனுஷ் கூட்டணியில் வெளியான “ஒய் திஸ் கொலவெறி ” பாடல் கடல் கடந்து வேறு நாடுகளிலும் ரசிக்கும் படியாக ஹிட் ஆனது. மேலும் யூடியூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது என்ற சாதனையையும் படைத்துள்ளது.
நடிகர், பாடகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் 3, எதிர்நிச்சல், வேலையில்லா பட்டதாரி, நானும் ரவுடிதான், விசாரணை, வட சென்னை என சூப்பர் ஹிட் வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தார். விசாரணை, காக்க முட்டை ஆகிய படங்களுக்கு தயாரிப்பாளராக தேசிய விருது வழங்கப்பட்டது.
45 படங்களுக்கு மேல் நடித்துள்ள தனுஷ் 14 தென்னிந்தியா திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார். இந்தியா அளவில் பிரபலமான 100 நபர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டு வரும். இதில் 6 முறை இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தனுஷ் தீவிர சிவன் பக்தர். தனது மகன்களான லிங்கா, யாத்ரா என இருவருக்கும் சிவன் பெயரை வைத்துள்ளார். தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதை அவ்வப்போது வெளிக்காட்டிக்கொள்வார். ரஜினி மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
ராயன், குபேரா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]