இந்தியா வங்கதேசம் இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் 35 முறை 5-haul விக்கெட் வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் வெளியான ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான “Lubber Pandhu” திரைப்படத்தை பாராட்டி தனது X தளத்தில் பதிவு.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலில் IPL-ல், ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் 2010-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் T20, டெஸ்ட் கிரிக்கெட்டுகளிலும் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை தற்போது வரை வெளிக்காட்டி இருக்கிறார். “Ash அண்ணா” என்று கிரிக்கெட் வட்டாரத்தில் அவரை செல்லமாக அழைப்பர். ICC ஒரு நாள் உலகக் கோப்பை (2011), ICC சாம்பியன்ஸ் கோப்பை (2013), ACC ஆசிய கோப்பை (2010,2016) வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து அந்த வெற்றிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த 5-வது சதம் மற்றும் பௌலிங்கில் எடுத்த 6 விக்கெட் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வெல்ல அடித்தளம் போட்டது.
Ok this is about a movie :
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) September 23, 2024
Movie making is a serious business and it involves so much hard work and creativity, hence I largely look at the positives in any movie and speak very little about the negatives.
But, today I can’t resist but mention that I enjoyed a movie after…
செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள எல்லாத் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்த “Lubber Pandhu” படத்தை பல பிரபலங்களும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும் பாராட்டியுள்ளார்.
லப்பர் பந்து’ படத்தின் காதல் ரசம் பாடும் ‘சில்லாஞ்சிருக்கியே’ பாடல்!
“சரி இது ஒரு திரைப்படத்தை பற்றியது:
திரைப்படம் தயாரிப்பது என்பது வணிகரீதியில் மிகவும் கடினமானது, மேலும் இது மிகவும் கடின உழைப்பு மற்றும் படைப்பாற்றலை உள்ளடக்கியது எனவே நான் எந்த திரைப்படத்திலும் நேர்மறைகளை அதிகம் பார்க்கிறேன் மற்றும் எதிர்மறைகளைப் பற்றி மிகக் குறைவாகவே பேசுகிறேன்.
கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் மையத்திலிருந்து விலகி, அவர்கள் தெரிவிக்க விரும்புவதை வழங்க முனைகின்றன, அதனால் தான் “Lubber Pandhu” எனக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தந்துள்ளது.
மிகவும் நம்பகத்தன்மை கொண்ட, மிகவும் உண்மையானதாக மற்றும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட அவர்கள் தேடுவது போலவோ அல்லது தேவையற்றதாகவோ தெரியவில்லை.
இயக்குனர் மற்றும் அவரது மொத்த படக்குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்”
என்று பாராட்டி அதில் நடித்த நடிகர், நடிகைகளை குறிப்பிட்டு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹரீஷ் கல்யாண் பிறந்தநாளுக்கு இரண்டு படங்களின் அப்டேட் – லப்பர் பந்து & டீசல்!
வெளியான நாள் | இயக்குனர் | இசை | படக்குழுவினர் |
20 செப்டம்பர் | தமிழரசன் பச்சமுத்து | ஷான் ரோல்டன் | ஹரிஷ் கலைஞன், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பாலா சரவணன், காலி வெங்கட், தேவதர்ஷினி, கீதா கைலாசம் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]