Home Cinema News Indian 1 ரீ- ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?!

Indian 1 ரீ- ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?!

Indian 1 படம் Re-release ஆகி ஒரே நாளில் நல்ல வசூல்.| Indian 1 re-release box office collection.

by Vinodhini Kumar

தமிழில் 2024 புதிய படங்கள் எதுவும் பெரியளவில் கொண்டாடப்படாமல் இருக்கும் நிலையில், Re-release செய்து வருவது டிரெண்டாக உள்ளது. இதில் ஏற்கனவே ‘கில்லி’, ‘பில்லா’, ‘தீனா’, ‘போக்கிரி’ போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது Indian 1 படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. 1996ல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா மடோன்ட்கர், கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, நாசர் நடித்த படம் ‘இந்தியன் 1’. 

Indian 1996 poster

28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர், இதன் செய்திகளுக்கு நல்ல ஆவல் ஏற்ப்பட்டுள்ளதால் இப்போது Indian 1 படத்தை மறுபடியும் வெளியிட்டு உள்ளனர். திரையில் இந்தியன் தாத்தாவை மீண்டும் பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர். ஏற்கனவே வலைதளங்களில் இந்தியன் படத்தின் பிரம்மாண்டத்தை பற்றியும் ஏ ஆர் ரஹ்மானின் தரமான பாடல்களையும் கொண்டாடி வரும் ரசிகர்கள், Re-release செய்ததால் தியேட்டர்களில் குவிகிறார்கள். 

Indian 1 Character

இந்தியன் தாத்தா வேடத்தில் இந்தியன் 2 படத்தின் போஸ்டர்களும் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. சுதந்திர போராட்ட தியாகியான சேனாதிபதி, முதுமை காலத்தில் ஊழல்களை எதிர்க்கும் வீரமான பாத்திரத்தை மறுபடியும் திரையரங்குகளில் பார்க்க பெரிய ரசிகர் கூட்டமே திரண்டிருப்பது ஆச்சரியமானது இல்லை. 

Indian 1 வசூல்

ரீ ரிலிஸ் படங்களில் மாபெரும் வசூல் சேர்த்த கில்லி படம் அளவில் முதல் நாளிலேயே 1 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது இந்தியன் படம். இரண்டு நாட்கள் வார முடிவில் புதிய படங்கள் எதுவும் சுவாரசியமாக இல்லாததால் இந்தியன் படத்திற்கு நல்ல வசூல் காத்திருக்கிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.