Home Cinema News இந்தியன் 2 படத்தின் அடுத்த பாடல் ‘Calendar’ வெளியாகியுள்ளது! 

இந்தியன் 2 படத்தின் அடுத்த பாடல் ‘Calendar’ வெளியாகியுள்ளது! 

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் புதிய பாடல், ‘Calendar’ வெளியாகி வைரலாகி வருகிறது.

by Vinodhini Kumar

கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா என பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது.

இன்று Calendar பாடலை சோனி மியூசிக் சவுத் யூடியூப் தளத்தில் வெளியிட்டது படக்குழு. அனிருத் ரவிச்சந்தர் இசையில் SUVI மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் இந்த பாடலை பாடியுள்ளார்கள். எழுத்தாளர் கபிலன் வைரமுத்து பாடல் வரிகள் தந்துள்ளார். 

இந்த பாடலை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியிட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் நடக்கும் ஊழலை தடுக்கு மீண்டும் இந்தியன் தாத்தா சேனாதிபதி வந்துள்ளதாக இயக்குனர் ஷங்கர் தற்போது நடந்து வரும் புரொமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

மறைந்த நடிகர்கள் சின்ன கலைவாணர் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன் தயாரிப்பில் ‘இந்தியன் 2’ படம் ஜூலை 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.