கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் trailer தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் சங்கர் உருவாக்கிய இந்தியன் தாத்தா என்ற பாத்திரம் மறுபடியும் திரையில் தோன்றுகிறது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் நடிகை ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என பெரிய நடிகர் குழு நடித்துள்ளார்கள்.
இந்தியன் 2 trailerல் நடிகர் சித்தார்த் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்க்கும் போராளியாக நடித்துள்ளார். ப்ரியா பவானி சங்கர், ஜெகன் என ஒரு இளைஞர் குழு ஊரில் நடக்கும் ஊழல்களை தட்டி கேட்கும் போராளிகளாக நடிப்பது தெரிகிறது. படத்தின் வில்லன் S.J. சூர்யா கோடீஸ்வரராக வருகிறார். தற்போதைய சூழலில் நடக்கும் ஊழல்களையும் சுரண்டலையும் எதிர்க்க ஆளே இல்லையா? என்ற கேள்விக்கு பதிலாக வருகிறார் இந்தியன் தாத்தா. பல வேடங்களில் நோக்கு வர்மம் கொண்டு மீண்டும் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் அரசியல் செய்பவர்களை தட்டி கேட்க மறுபடியும் இந்தியன் தாத்தா வருவதாக கதைக்களம்.
![இந்தியன் 2 trailer வெளியானது! 2 இந்தியன் 2 poster](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/06/Indian-poster-655x1024.jpeg)
இயல்பான சங்கர் படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சிகள், drone காட்சிகள் என படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ‘இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்றும் ‘நேதா ஜி வழியில்’ இந்தியன் தாத்தா திரும்பி வந்துள்ளதாகவும் வந்துள்ள வசனங்கள் டிரெய்லர் படத்துக்கு பலம். பிக் பாஸில் கூறிய ‘ஓடவும் முடியாது அறியவும் முடியாது’ என்ற வசனங்களின் அவசியமா உண்டா என கேள்வி எழுப்புகிறது.
இந்தியன் 2 promotion event
இன்று சென்னையில் இந்தியன் 2 படக்குழுவினர் ஒரு பிரத்யேக promotion நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் சங்கர், உலகநாயகன் கமல் ஹாசன், நடிகர் சித்தார்த், படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மா, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் என பலர் கலந்துகொண்டனர். நடிகர் சித்தார்த் Indian 2 படத்தில் நடித்த அனுபவத்தையும், தன்னுடைய ஆஸ்தான குருவாக அவர் கருதும் நடிகர் கமல் ஹாசனுடன் நடித்ததை பற்றியும் புகழ்ந்து பேசினார். இசையமைப்பாளர் அனிருத் இயக்குனர் சங்கர் உடன் வேலை செய்த அனுபவம் பற்றியும் அவரின் அனுபவத்தில் அவர் பார்த்த மிகப்பெரும் உழைப்பு இந்தியன் 2 படத்தில் தான் என்றும் புகழ்ந்து பேசினார். இந்த படம் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.