Home Cinema News 2024- இந்தியன்-2, வணங்கான், அமரன் படங்கள் உறுதியான ரிலீஸ் தேதி! 

2024- இந்தியன்-2, வணங்கான், அமரன் படங்கள் உறுதியான ரிலீஸ் தேதி! 

2024ல் வரிசையாக வெளியாக உள்ள இந்தியன் 2 போன்ற முக்கியமான மூன்று படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு. 

by Vinodhini Kumar

2024 தமிழ் சினிமாவிற்கு முதல் பாதியில் பெரியளவு வெற்றி படங்கள் இல்லை என்றாலும், மகாராஜா, அரண்மனை 4 போன்ற படங்கள் வெற்றியாக அமைந்தது. உறுதியாக ரிலீஸ் ஆக உள்ள மூன்று முன்னணி படங்கள் இவை.

இந்தியன் 2 (2024)

Indian 2 poster 2024 ரிலீஸ்

இயக்குனர் சங்கர், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் என பெரிய குழுவுடன் உருவாகும் படம் இந்தியன் 2. இந்த ஆண்டு அதிகம் பேசப்படும் படம், இதனுடைய ரிலீஸ் தேதி முன்னோக்கு பின் மாற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜூலை 12 வெளியாகும் என உறுதியாக அறிவித்துள்ளார்கள். 

வணங்கான் (2024)

Vanangaan poster 2024

இயக்குனர் பாலா, நீண்ட இடைவேளைக்குப் பின் எடுக்கும் படம், வணங்கான். அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் நடித்து பல சிக்கலுக்கு பிறகு உருவாகி 2024ல் ஆகஸ்ட் 15 வெளியாகிறது. இந்த படத்தில் முதலில் நடிகர் சூரியா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அமரன் (2024)

Amaran poster 2024

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகிறது. இந்திய இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் பாத்திரத்தை ஏற்கிறார் சிவகார்த்திகேயன். உடன் பாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் என பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்டு வெளியாகும் என இருந்த நிலையில் இப்போது செப்டம்பர் 27 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது‌. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.