கோலிவுட்டின் பிரபலமான தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ‘அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, தெகிடி, முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று, அதே கண்கள்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார்.
தற்போது, சி.வி.குமார் எக்ஸ் தளத்தில் தனது தயாரிப்பில் உருவாகப்போகும் இரண்டு புதிய படங்களுக்கு பூஜை போட்டிருப்பதாக பதிவிட்டதுடன், புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.
New office , New Beginning , New Projects with budding talents . Thx to Lord Murugan for his mercy on me @thangamcinemas @ThirukumaranEnt @nasser_kameela pic.twitter.com/xRuW3Vgo4F
— C V Kumar (@icvkumar) April 5, 2024
இதில் ஒரு படம் ‘இன்று நேற்று நாளை‘ படத்தின் பார்ட் 2. டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து ரெடியாகும் இதற்கு முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் தான் கதை-திரைக்கதை எழுதியிருக்கிறார். இப்படத்தை ‘இஃக்லூ’ புகழ் இயக்குநர் பரத் மோகன் இயக்கப்போகிறாராம்.
இன்னொரு படம் ‘பீட்சா’ 4 : ஹோம் அலோன்’. ஹாரர் ஜானர் படமான இதில் ஹீரோவாக பிரபல நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ஆண்ட்ரூஸ் இயக்கப்போகிறாராம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]