இன்று தொடங்கிய கிரிக்கெட் தொடரான IPL -இன் 17 வது சீசன் சென்னையில் நடக்க உள்ளது. ரசிகர்களால் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த மேட்ச் இன்று இரவு 8 மணியளவில் நடக்கவுள்ளது. மிகவும் விலையுர்ந்த கிரிக்கெட் லீக் 17 வது சீசன்-இன் முதல் மேட்ச் என்பதால் 6.00 மணிக்கு தொடங்கி 7.30 மணி வரை ஒபெனிங் செரோமினி அதனால் கொஞ்சம் தாமதமாக ஆரம்பிக்கப்படும். இந்த விழாவில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையுடன் தொடங்குள்ளது இது மேலும் ரசிகர்களை உற்சாகபடுத்தும்.
இந்த கிரிக்கெட் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சானலில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும், அதுமட்டுமல்லாமல் ஜியோ சினிமா ஆப்-இலும் நேரலையாக பார்க்கலாம்.
நம்முடைய டீம் ஆனா சென்னை சூப்பர் கிங்க்ஸ் –இல் இதற்க்கு முந்தைய தொடரில் ஜடேஜா கேப்டன் ஆக இருந்தார், பின்பு பாதி ஆட்டத்திற்கு பிறகு தோனி-யை கேப்டனாக மாற்றி வெற்றி கண்டனர். இந்த சீசனில் தோனி தனது பேஸ்புக் பதிவில் “புதிய சீசனில் புதிய வேலைக்காக (ரோல்) காத்திருக்க முடியவில்லை” என கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய சீசன்களிலெல்லாம் ராஷ்மிகா மந்தனா, தமன்னா, நயன்தாரா, த்ரிஷா, ரஜினிகாந்த், மேலும் பல முன்னணி திரையுலக பிரபலங்கள் பங்கேட்றனர். அதேபோல் இந்த சீசனில் யாரெல்லாம் வர போகிறார்கள் என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ANBUDEN VARUGA! Let's take to the stadium, Superfans! 🔥#CSKvRCB #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Tu37H5FliY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2024
சென்னை சூப்பர் கிங்க்ஸ்- ற்கும் ராயல் சேலன்சற்க்கும் இடையே நடக்கவுள்ள இந்த ஆட்டத்தில் CSK’விற்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் ஆகவும் ஆர்.சி.பி.-க்கு பாப் டு ப்லேசிஸ் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சி.எஸ்.கே. ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது, ஆர்.சி.பி ஒருமுறைகூட வாங்கியதில்லை. விறுவிறுப்பான தொடரை இன்று தமிழ் மொழியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல் கண்டு களிப்போம். இதற்க்கு ஹோஸ்ட் ஆக முன்பு வந்த ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவையூட்டும் ரன்னிங் கமெண்ட்ரி அனைவரையும் குதூகளபடுத்தும் அவருடைய கமெண்ட்ஸ் காக தமிழில் பார்க்கவும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தோனி களத்தில் இறங்கியவுடன் ரசிகர்களின் மனதிற்ககுள்ளிருந்து ஒரு எழுச்சி ஒரு தைரியம் வருவதை வார்த்தைகளால் சொல்லமுடியாது, இந்த season அவர் இல்லை என்பதுதான் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்துத்தம். இந்த ஐ.பி.எல். தொடர் எப்படி ஆரவாரபடுத்தபோகிறது என்பதை பார்க்கலாம். மொத்ததில CSK-க்கு விசில் போடு.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com