Home Cinema News அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’ அந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’ அந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

by Santhiya Lakshmi

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் கைவசம் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி‘, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ என 2 படங்கள் இருக்கிறது.

image w856

இதில் ‘விடாமுயற்சி’ படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். சுபாஸ்கரனின் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் இப்படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூலில், கார் சேஸிங் காட்சியை படமாக்கும்போது நடிகர்கள் அஜித் மற்றும் ஆரவ் சென்ற கார் விபத்தில் சிக்கிய வீடியோ நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதன் அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங்கிற்காக வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி படக்குழுவினர் வெளிநாட்டுக்கு கிளம்பத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தை 1997-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘Breakdown’ என்ற படத்தை தழுவி தான் மகிழ் திருமேனி எடுத்து வருகிறார் என தகவல் கசிந்துள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.