Home Cinema News பிரபாஸ் – கமல்ஹாசன் சேர்ந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’-யின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

பிரபாஸ் – கமல்ஹாசன் சேர்ந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’-யின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

by Santhiya Lakshmi
nag ashwin has introduced several intriguing twists in kalki b 0703240243

டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான பிரபாஸ் கைவசம் ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’, ‘ஸ்பிரிட்’ ஆகிய மூன்று படங்கள் மட்டும் உள்ளது. இதில் ‘கல்கி 2898 AD’ படத்தை ‘நடிகையர் திலகம்’ புகழ் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு (2023) இப்படத்தின் GLIMPSE வெளியான நாளில் இருந்தே ஆடியன்ஸின் எக்ஸ்பெக்டேஷன் எகிறி விட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இதில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தான் வில்லனாக மிரட்டப்போகிறாராம்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

சமீபத்தில், இந்த படத்தை வருகிற மே 9-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை மே 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பிரபாஸ் – கமல்ஹாசன் மோதும் மெகா பட்ஜெட் படமான ‘KALKI 2898 AD’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.