Home Cinema News லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ அந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?… தீயாய் பரவும் தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ அந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?… தீயாய் பரவும் தகவல்!

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ‘வேட்டையன்’ மற்றும் ‘தலைவர் 171’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘தலைவர் 171’ படத்தை ‘மாஸ்டர், விக்ரம், லியோ’ போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.

இந்த படத்துக்கு ‘Eagle’ என டைட்டில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் டைட்டில் டீசருக்கான ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள EVP ஃபிலிம் சிட்டியில் துவங்கவுள்ளனர்.

99360467

இந்த டைட்டில் டீசரை வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியிட ப்ளான் போட்டுள்ளது ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம். இந்நிலையில், இப்படத்தை 2013-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘The Purge’ என்ற படத்தை தழுவி தான் லோகேஷ் கனகராஜ் எடுக்கப்போகிறார் என கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் ‘தளபதி’ விஜய்யை வைத்து இயக்கிய ‘லியோ’வும் 2005-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘A History of Violence’ என்ற படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.