Home Cinema News தள்ளிப்போகிறதா சுந்தர்.சி – தமன்னா நடித்திருக்கும் ஹாரர் படமான ‘அரண்மனை 4’ ரிலீஸ்?

தள்ளிப்போகிறதா சுந்தர்.சி – தமன்னா நடித்திருக்கும் ஹாரர் படமான ‘அரண்மனை 4’ ரிலீஸ்?

முதலில் 'அரண்மனை 4'ஐ வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

by John Kamalesh

பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கி, தயாரித்து, நடித்த ஹாரர் காமெடி ஜானர் படமான ‘அரண்மனை’யின் முதல் மூன்று பாகங்களுமே ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கி ஹிட் முத்திரையை பெற்று தந்தது. இப்போது ‘அரண்மனை’யின் பார்ட் 4-ஐ இன்னும் அதிக பொருட்செலவில் எடுத்திருக்கிறார் சுந்தர்.சி.

இதில் சுந்தர்.சியுடன் இணைந்து, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், டெல்லி கணேஷ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Aranmanai 4

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இதற்கு ஈ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் ‘அச்சச்சோ’ என்ற ப்ரோமோ பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது.

முதலில் இந்த படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை மே 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.