Home Cinema News விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’-ன் தயாரிப்பாளர் மாற்றமா?

விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’-ன் தயாரிப்பாளர் மாற்றமா?

முதலில் 'தளபதி 69'ஐ 'DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் சார்பில் D.V.V. தானய்யா தயாரிக்கப்போவதாக சொல்லப்பட்டது. தற்போது, 'DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

by Santhiya Lakshmi


கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் கைவசம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69‘ ஆகிய 2 படங்கள் இருக்கிறது.

இதில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறதாம். ‘தளபதி 69′ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, இம்மாத இறுதியில் வர வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

அரசியல் என்ட்ரிக்கு முன் விஜய்யின் திரையுலக வாழ்வில் இது தான் கடைசி படம் என்பதால், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது அதிகமாக உள்ளது. முதலில் இப்படத்தை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் D.V.V. தானய்யா தயாரிக்கப்போவதாக சொல்லப்பட்டது.

தற்போது, ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை தயாரிக்க ‘சன் பிக்சர்ஸ்’, ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’, ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ ஆகிய நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.