இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “Jailer” திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் திரைப்படமாக ஆனது. அதற்கு அடுத்த ஆண்டு 2024 ல் நடைபெற்ற SIIMA மற்றும் IIFA Utsavam விருது நிகழ்ச்சியில் மொத்தம் 8 விருதுகளை வென்றுள்ளது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அடுத்த பாகம் எடுக்கும் முனைப்பில் படக்குழு இருப்பதாக கூறப்பட்டு வந்தது, அதை உறுதியும் செய்தார் இயக்குனர் நெல்சன்.
சில நாட்களுக்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் உடன் மீண்டும் இணைந்துள்ள புதிய படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறி இறுதியில் ஜனவரி 14 அன்று மாலை 6 மணிக்கு வெளியிட முடிவு செய்தனர்.
Jailer 2 – லான்ச் ப்ரோமோ
வெளியான “Jailer 2” லான்ச் ப்ரோமோ வழக்கம் போல் இயக்குனர் நெல்சனின் டார்க் காமெடி பாணியில் அமைந்திருந்தது. ப்ரோமோவில் தோன்றும் அனிரூத் மற்றும் நெல்சன் ஒரு பார்ம் ஹவுஸ் போன்ற இடத்தில் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு அடுத்த படத்தின் கதையை யோசிக்க… அதிரடியான ஆக்சன் காட்சிகளுக்கு மத்தியில் களம் இறங்குகிறார் “தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”.
இந்த இரண்டாம் பாகமும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், எந்த மாதிரி கதைக்களம் அடுத்து இருக்கும் என்ற ஆர்வத்தை மக்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.
#Jailer2 🔥🔥🔥
— Anirudh Ravichander (@anirudhofficial) January 14, 2025
Thalaivar Superstar @rajinikanth with @Nelsondilpkumar and @sunpictures 💥💥💥 It doesn’t get bigger than this 🎉🎉🎉
Tamil – https://t.co/8N8T6iikOS
Telugu – https://t.co/aSEcogcrCC
Hindi – https://t.co/dKOP5dFKJJ#AlapparaKelapparom #ThalaivarNirandharam pic.twitter.com/yN1V0GFmwE
Jailer-2 படக்குழு
- இயக்குனர் – நெல்சன்
- இசை – அனிருத்
- கதாநாயகன் : நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]