Home Cinema News ஜெயிலர் 2 படத்தின் வேலைகள் தொடங்கியது! இயக்குனர் நெல்சன் கொடுத்த அப்டேட். 

ஜெயிலர் 2 படத்தின் வேலைகள் தொடங்கியது! இயக்குனர் நெல்சன் கொடுத்த அப்டேட். 

ஜெயிலர் 2 படத்தின் உருவாக்கம் பற்றி அப்டேட் கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார். 

by Vinodhini Kumar

2023ம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ப்ளாக்பஸ்டர் படம் தான் ஜெயிலர். 200 கோடி பட்ஜெட்டில் ஆக்க்ஷன் படமாக உருவாகி ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

Source: X (Rudhra Bhai 2.0)

நெல்சன் திலீப்குமார் இப்போது ஜெயிலர் 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகர் யோகிபாபு இந்த படத்தின் ஜெயிலர் பாகம் 2 உருவாவதை பற்றி ஒரு நேர்காணலில் கூறினார். இப்பொது படத்தை பற்றி ஒரு விருது வழங்கும் விழாவில் ட்ரைலர் பற்றியும், படத்தின் வேலைகள் பற்றியும் கூறியுள்ளார்.  

Jailer 1 poster

இதில் பின்னணி இசையாக வெளியான ‘Hukkum’ பாடலின் ஓராண்டு நாள் கூட இணையத்தில் படு வைரலாக பேசப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் அந்த பின்னணியின் உருவாக்கத்தை பற்றி வீடியோ வெளியிட்டார். 

நெல்சன் இயக்கத்தில் மீண்டும் Box Office அடிக்க வருகிறதா Jailer 2?

ஜெயிலர் 2 பற்றிய செய்திகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என்றும், அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் தயாரிப்பு நிறுவனம் வழியாக வெளியாகும் என அவர் கூறினார். 2023ல் அதிக வசூல் செய்த படமாக அமைந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.