Home Cinema News ஜூனில் ஆரம்பமாகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘ஜெயிலர்’ பட நடிகர்!

ஜூனில் ஆரம்பமாகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘ஜெயிலர்’ பட நடிகர்!

by Naveen Dhayalan
GIogInhawAA033K

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் கைவசம் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி‘ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி படக்குழுவினர் வெளிநாட்டுக்கு கிளம்பவுள்ளனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கை வருகிற ஜூன் 13-ஆம் தேதி முதல் சென்னையில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதில் அஜித் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கப்போவதாகவும், அவருக்கு ரூ.163 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. இப்படத்தை அதிக பொருட்செலவில் ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதாம்.

இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். தற்போது, இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சுனில் தமிழில் ‘மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி, ஜப்பான்’ ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.