Home Cinema News தயாரிப்பாளராகும் ‘Jailer’ இயக்குநர் Nelson… முதல் படத்தின் ஹீரோ யாரு?

தயாரிப்பாளராகும் ‘Jailer’ இயக்குநர் Nelson… முதல் படத்தின் ஹீரோ யாரு?

நெல்சனின் அடுத்தப்படம் என்ன எனத்தெரியாமல் இருந்த சூழலில்தான் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் Nelson.

by Naveen Dhayalan

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியிருப்பவர் நெல்சன். விஜய் டிவி நெல்சன் என ஆரம்பத்தில் அறியப்பட்ட நெல்சன் இப்போது ‘ஜெய்லர்’ நெல்சனாக அடையாளப்படுத்தப்படுகிறார். ஆனால், இந்த விஜய் டிவி நெல்சனுக்கும், ‘ஜெய்லர்‘ நெல்சனுக்கும் இடையே மிகப்பெரிய போராட்டத்தை கடந்துவந்திருக்கிறார் நெல்சன்.

விஜய் டிவியில் ‘அது இது எது’, ‘விஜய் அவார்ட்ஸ்’, ‘சூப்பர் சிங்கர்’ போன்ற நிகழ்சிகளை இயக்கிவந்தவர் நெல்சன். விஜய் டிவி மூலமாக நடிகர் சிம்புவின் நட்பு கிடைக்க ‘வேட்டை மன்னன்’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. விஜய் டிவியை விட்டுவிட்டு சினிமா இயக்குநரானார் நெல்சன். ஆனால், எல்லாம் சில நாட்களுக்கு மட்டுமே. சிம்பு, ஹன்சிகா மோட்வானி இணைந்து நடித்த இந்தப்படம் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் பிரச்சனைகளால் அப்படியே நின்றுபோனது. நெல்சனும் வேறு வழியில்லாமல் மீண்டும் விஜய் டிவி இயக்குநரானார்.

விஜய் அவார்ட்ஸ், விகடன் அவார்ட்ஸ், அனிருத்தின் ஸ்டேஷ் ஷோக்களை இயக்க ஆரம்பித்தவருக்கு, அனிருத் மூலம் சினிமாவில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. விக்னேஷ் சிவனிடம் அனிருத் நெல்சன் ஒரு நல்ல கதை வைத்திருக்கிறார் என அறிமுகப்படுத்த அப்படி உருவானதுதான் ‘கோலமாவு கோகிலா’. இந்தப்படம் பெரிய ஹிட் அடிக்க, நீண்ட கால ‘அது இது எது’ நண்பரான சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்க ‘டாக்டர்’ உருவானது. 

இந்தச் சூழலில் நடிகர் விஜய் சன் பிக்சர்ஸுக்காக டேட் கொடுக்க சுதா கொங்கரா படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், சுதா கொங்கரா ப்ரீ ப்ரொடஷனுக்கே ஆறு மாதங்கள் வேண்டும் என டைம் கேட்க, விஜய் தனது டேட்ஸ் வீணாவதை விரும்பவில்லை. வெற்றிமாறனிடம் கேட்க அவரும் விடுதலை, வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருந்ததால் விஜய் படத்தை யார் இயக்குவதற்கான தேடல் தொடங்கியது. அப்போது மாஸ்டர் படத்தின் ரீ-ரெகார்டிங்கின்போது விஜய்யிடம் நெல்சன் பற்றி அனிருத் சொல்ல, உடனடியாக நெல்சனிடம் விஜய் கதை கேட்க, ‘பீஸ்ட்’ உருவானது.

பீஸ்ட் ஷூட்டிங் நடக்கும்போது ரஜினி தன்னுடைய அடுத்தப்படமான ‘ஜெயிலர்’ படத்துக்கு நெல்சனை ஒப்பந்தம் செய்யச்சொல்லிவிட்டார். ‘ஜெயிலர்’ படம் நீண்ட வருடங்களுக்குப்பிறகு ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இந்நிலையில் நெல்சனின் அடுத்தப்படம் என்ன எனத்தெரியாமல் இருந்த சூழலில்தான் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் நெல்சன்.

kavin

FILAMENT PICTURES எனத் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயரிட்டிருக்கும் நெல்சன், தனது கடந்த கால விஜய் டிவி நண்பனான ‘கவின்’ உடன் இணைகிறார். ஆமாம், நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமாகப்போகும் படத்தின் ஹீரோ ‘கவின்’தான். பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற கவின் நடிப்பில் வருகிற மே 10-ம் தேதி ‘ஸ்டார்’ என்கிற படம் ரிலீஸாகயிருக்கும் நிலையில் நாளை நெல்சன் – கவின் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகயிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.