சினிமா துறையில் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் செய்தி தான் பாலியல் குற்றச்சாட்டு. கேரளாவில் தொடங்கிய பாலியல் சர்ச்சை, தமிழ், கன்னடம் வரை சென்று தற்போது தெலுங்கு சினிமாவிலும் காட்டு தீயாய் பரவி வருகிறது.
தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் பிரபலமான பாடல்கள் பலவற்றிற்கு Choreographer ஆக இருந்தவர் நடன கலைஞர் Jani. இவர் பல ஆண்டுகளாக தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகளுக்கு Choreograph செய்தும், பல நாடன் கலைஞர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
19/09/2024
தெலுங்கு நடன கலைஞர் ஜானி, 16 வயது இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல் முறை அந்த பெண்ணிடம் அத்துமீறியபோது அவர் 16 வயது சிறுமி என்பதால் இன்று ‘POCSO’ வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாளம் சினிமாவை உலுக்கிய Hema Committee report – இந்தியாவின் பேசுபொருளாக மாறியது எப்படி?

42 வயதாகும் Jani Master, தன்னை விட பாதி வயதான இளம் பெண்ணை பல முறை பாலியல் வன்முறை அளித்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தன்னுடைய 16 வயது முதல் படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் பல முறை Jani Master அந்த பெண்ணை சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய படப்பிடிப்பு தளங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்வந்து தெரிவித்துள்ளார்.

இந்த நடன கலைஞர் Jani Master உடைய Assistant Choreographer -ஆக இருந்துவந்தார். தமிழில் ‘Halamathi Habibo’, ‘Ranjithamey’, ‘மேகம் கருக்காதா’ என்ற பாடல்களில் துணை நடன கலைஞராக இருந்தார். தற்போது இவர் Jani Master மீது ஒரு கடிதம் வழியாக ஸ்பிட்ம்பர் 11ம் தேதி வாக்குமூலம் அளித்து பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
முதலில் அவர் அளித்த புகார் Zero FIR ஆக பதிவிடப்பட்டது. பின்னர் இந்த வழக்கை வேறு காவல் நிலையத்தில் வழக்கு கைமாற்றப்பட்டதாகவும், பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ஒரு மகளிர் குழுமம் வழியாக வழக்கை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
அவரின் பாலியல் சீண்டல்களுக்கு இடம் கொடுக்க மறுத்ததால், ஜானி மற்றும் அவரது மனைவி இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி மிரட்டியதாகவும் புகார் கொடுத்துள்ளார்.
Jani Master சர்ச்சையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்
நடிகரும் ஜனசேன கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் உடைய நண்பர் Jani Master. இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியிலும் இருந்த ஜானி, இந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திரை துறையினர் சார்பிலும், காவல் துறை சார்பிலும் தனிப்படை அமைத்து, இந்த குற்றச்சாட்டை தீவிரமாக ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு வெளியில் தெரிய தொடங்கிய பின்னர் நடன கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜானி நீக்கப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்க தடை. நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்.
நாடன் கலைஞர் ஜானி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (2) (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), 506 (Criminal மிரட்டல்) மற்றும் 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் பாதிக்கப்பட்ட நபர் இந்த பாலியல் வன்முறை தொடங்கியபோது 16 வயதானவராக இருந்ததால், வழக்கமாக பதிவு செய்யும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தை (POCSO) போலீசார் இன்னும் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரை துறையினரின் ஆதரவு
நடிகர் அல்லு அர்ஜுன் வெளிப்படையாக இந்த பாலியல் சர்ச்சை பற்றி தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் பணியாற்றும் அணைத்து படங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

நடிகைகள் சமந்தா மற்றும் லக்ஷ்மிமஞ்சு ஆகியோர் 2022ல் உருவாக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின பாகுபாடு குறித்த Sub – Committee Report ஐ பொது உடைமையாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடனக்கலைஞர் ஜானி மீது காவல் துறையில் வழக்கு பதிவது முதல் முறை இல்லை. ஜூன் 2024ல் சதிஷ் என்ற நடன கலைஞர், ஜானி மாஸ்டர் அவரை மிரட்டி அவரின் பட வாய்ப்புகளை கிடைக்காமல் தடுத்ததாக வழக்கு பதிந்தார்.
“Caravan -ல் கேமரா வைத்து நடிகைகளை படம்பிடிப்பார்கள்” நடிகை ராதிகா சரத்குமார் Open Talk!
மேலும் 2019ல் ஒரு கல்லூரியில் சண்டையிட்டதற்காக 6 மாதங்கள் சிறையில் இருந்து வெளிவந்துளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டை பற்றி ஜானி மாஸ்டர் தரப்பிலிருந்து எந்த வித கருத்துக்களும் பிறப்பிக்கப்படவில்லை என்பதும், அவரை கைது செய்யவுமில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]