தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 60 முதல் 80 வரை முன்னணி நடிகையாக வளம் வந்தவர் Jayalalithaa. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்ஷ்ங்கர், NT. ராமா ராவ் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்திருந்தார்.
வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி தந்த ஜெயலலிதா அடுத்த படமே எம்.ஜி.ஆர் உடன் நடித்து அசத்தினார். அடுத்தடுத்த வெற்றி படங்கள், நடனம், நடிப்பு என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக காலூன்றினார்.

1961 முதல் 1980 வரை கிட்டத்தட்ட 140 படங்களுக்கு மேல் நடித்து தென்னிந்திய சினிமாவில் Jayalalithaa என்ற ஆளுமை உருவாக்க அடித்தளமாக இருந்தது. தமிழில் 1980-ல் “நதியை தேடி வந்த கடல்” என்ற படத்தில் ஹீரோயின் ஆக நடித்ததற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இதற்க்கு காரணம் எம்.ஜி.ஆர் அவர்களின் அரசியல் வாரிசாக அவரை பின் தொடர்ந்து அவர் வழியில் அவர் விட்டு சென்ற பொறுப்புகளை பார்த்துக்கொண்டார்.
“நதியை தேடி வந்த கடல்” படம் 1980-ஆம் ஆண்டு பி. லெனின் இயக்கத்தில் ஜெயலலிதா மற்றும் சரத் பாபு நடித்திருந்தனர். மகரிஷி என்ற பெயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து, பஞ்சு அருணாசலம் பாடல் வரிகள் எழுதியிருந்தார். “பூந்தோட்டம் பூவில்” பாடல் கேட்பதற்கு இனிமையாக ரசிக்கும் படி இருந்தது.

இதற்க்கு பிறகு “நாயக்குடு விநாயகுடு” என்ற தெலுங்கு படத்தில் அதே ஆண்டு நடித்திருந்தார். ஜெயலலிதா அவர்கள் சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்த கடைசி படம் இது. அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து தமிழக முதல்வராக இருந்த போது ” நீங்க நல்ல இருக்கணும்” என்ற படத்தில் ஒரு சில காட்சிகளில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
தென்னிந்திய சினிமா உலகில் இருந்து அரசியலில் ஆளுமை ஏற்படுத்திய ஒரே பெண் தலைவர் என்று இன்றுவரை ஜெயலலிதா அவர்களை “அம்மா” என்று கொண்டாடி வருகின்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]