தமிழில் பல ஆண்டுகளாக மக்களுக்கு பிடித்த நிறைய படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. அவரை விட இணையதளங்களில் அவரின் மனைவி ஆர்த்திக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. இந்த இருவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதை அடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது ஒரு மாதத்திற்கு முன் இவர்களுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களின் திருமணம் முடிவுக்கு வரப்போவதாகவும் வதந்திகள் பரவியது.

இன்று நடிகர் Jayam Ravi தன்னுடைய இணையதளத்தில், இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து புரிவதாகவும், இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆர்த்தி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக கணவருடன் இருக்கு புகை படங்களை பகிர்ந்துவந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை நீக்கியது பலருக்கும் அதிர்ச்சியாகவும் சந்தேகத்தையும் உண்டாக்கியது.
Grateful for your love and understanding.
— Jayam Ravi (@actor_jayamravi) September 9, 2024
Jayam Ravi pic.twitter.com/FNRGf6OOo8
நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
ஆனால் அவரின் இன்ஸ்டாகிராம் பயோ இன்னும் married to ஜெயம் ரவி என்று தான் இருக்கிறது. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார், பல சிறு தொழில் செய்பவர்களுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் உதவி வருகிறார். இவர் பிரபல சின்னத்திரை தயாரிப்பாளர் உடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதம் முதல் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி உடைய திருமணம் விவகாரத்தில் முடியப்போவதாக பலர் இனையத்தில் பதிவிட்டாலும், ஜெயம் ரவியின் 21 வருட சினிமா பயணத்தை கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார். ஆனால் அதன் பின் இருவரின் மனா வேறுபாடு காரணமாக இப்போது விவாகரத்து நடந்துள்ளது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
GV Prakash, Saindhavi-ன் 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா
ஏற்கனவே தமிழில் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் – பாடகி சைந்தவி உடைய திருமணங்கள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]