Home Cinema News மீண்டும் கமலின் ‘THUG LIFE’-ல் இணைந்த ‘ஜெயம்’ ரவி & துல்கர் சல்மான்… அப்போ STR-க்கு என்ன ரோல்?

மீண்டும் கமலின் ‘THUG LIFE’-ல் இணைந்த ‘ஜெயம்’ ரவி & துல்கர் சல்மான்… அப்போ STR-க்கு என்ன ரோல்?

நடிகர்கள் துல்கர் சல்மானும், 'ஜெயம்' ரவியும் மீண்டும் 'தக் லைஃப்' படத்தில் நடிக்கப்போவதாகவும், நடிகர் சிலம்பரசனின் கேரக்டர் குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது.

by Santhiya Lakshmi

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும் – டாப் இயக்குநர் மணிரத்னமும் வேற லெவல் ஹிட்டான ‘நாயகன்’ படத்துக்கு பிறகு மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் படம் ‘தக் லைஃப்’. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது.

முதலில் இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து நடிகர்கள் துல்கர் சல்மான், ‘ஜெயம்’ ரவி, கெளதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், நாசர் நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி ஆகியோர் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின், இதன் படப்பிடிப்பும் துவங்கப்பட்டு சில நாட்கள் நடந்தது. 

இதற்கிடையில் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகி விட்டதால், நடிகர்கள் துல்கர் சல்மானும், ‘ஜெயம்’ ரவியும் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்த தேதிகளில் ‘தக் லைஃப்’ன் ஷூட்டிங் நடக்காமல் போனது. இதனால், அவர்கள் இருவருமே இப்படத்திலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு துல்கர் சல்மானுக்கு பதிலாக சிலம்பரசனும், ‘ஜெயம்’ ரவிக்கு பதிலாக நிவின் பாலியும் நடிக்கப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.

தற்போது, நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ‘ஜெயம்’ ரவி மீண்டும் இப்படத்தில் நடிக்கப்போவதாகவும், நடிகர் சிலம்பரசன் புதிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சிம்புவுக்கு இரண்டு வேடங்களாம். இதன் ஷூட்டிங்கை இம்மாதம் (ஏப்ரல்) தேர்தல் முடிந்ததும் செர்பியாவில் துவங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அங்கு கமல், ‘ஜெயம்’ ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா இடம்பெறும் க்ளைமேக்ஸ் காட்சியை படமாக்கப்போகிறார்களாம்.

இதனை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ & மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.