Home Cinema News ஜெயம் ரவி நடிக்கும் ‘Brother’ படத்தின் டீசர் விரைவில்! 

ஜெயம் ரவி நடிக்கும் ‘Brother’ படத்தின் டீசர் விரைவில்! 

ஜெயம் ரவி 2024ல் அடுத்ததாக பல படங்களில் நடித்துவருகிறார். அந்த வரிசையில் 'Brother' படத்தின் இசை மற்றும் டீசர் விரைவில் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

தமிழில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், அடுத்ததாக ஒரு காமெடி என்டேர்டைன்மெண்ட் படத்தை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ‘Brother’ படத்தின் டீசர் மற்றும் இசை விரைவில் வெளியாகும் என தகவல். 

Jayam Ravi Brother movie

Screen Scene மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் இசை, செப்டம்பர் 21 முதல் வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளான இன்று அவரின் படங்களின் தொடர் அப்டேட் வந்துள்ளது. 

நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தார்! 

இந்த அறிவிப்பை ஒரு சிறு பட காட்சியுடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி நடராஜன், சீதா, சரண்யா பொன்வண்ணன், ராவ் ரமேஷ், VTV கணேஷ், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பெரிய படக்குழு நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘Brother’ படத்தின் முதல் பாடல் ‘மக்காமிஷி’ பாடல் இணையத்தில் வெகு விரைவில் வைரலானது. இந்த படம் 2024 தீபாவளிக்கு வெளியாகிறது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.