ஜெயம் ரவி Thug Life படத்தில் இருந்து விலகினார்!
Mani Ratnam இயக்கத்தில் அடுத்தடுத்த அப்டேட்டாக வைரலாகி வரும் படம் ‘Thug Life’. உலக நாயகன் கமல்ஹாசன், அரவிந்த் ஸ்வாமி, அபிராமி, த்ரிஷா கிரிஷ்ணன், ஐஷ்வர்ய லட்சுமி, பாலிவுட் நடிகர்கள் பங்கஜ் த்ரிபாதி, அலி ஃபசல் என பலர் நடிப்பில் வேகமாக தயாராகி வரும் ‘Thug Life’-ல் பல பிரபலமான நடிகர்கள் நடித்து வருகிறார்கள். முன்னதாக மலையாள நடிகர் Dulquer Salmaan நடிக்க இருந்த ரோலில் அவருக்கு பதிலாக நடிகர் Silambarasan நடிப்பது உறுதியானது. அதிகாரபூர்வ அறிவிப்பாக சிம்புவின் காரெக்டர் போஸ்டர் வெளியிட்டது.

தற்போது நடிகர் Jayam Ravi-ம் கால்ஷீட் ஒத்து போகாமல் இருப்பதால் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். இவருடைய கதாப்பாத்திரம் இப்போது இளம் நடிகர் Ashok Selvan கையில் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழில் ‘சூது கவ்வும்’ , ‘தெகிடி’ , ‘ஓ மை கடவுளே’, சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘போர் தொழில்’ என ஹிட் நடிகராக வலம் வரும் Ashok Selvan, இயக்குனர் Mani Ratnam இயக்கத்தில் நடிப்பது அவரின் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
பொறுப்பான , இளைஞர்களை கவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் Ashok Selvan, இந்த படத்தில் எந்தமாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற ஆர்வம் கிளம்பியுள்ளது. விரைவில் இவரின் காரெக்டர் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
2024-ன் அதிகம் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான ‘Thug Life’-ல் கிடைத்த வாய்ப்பை பல காரணங்களால் நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்து விட்டது. விரைவில் படத்தின் மற்றுமொரு அப்டேட் A R Rahman-ன் இசையில் பாடலாக வரும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
மணி ரத்னம் – ஏ ஆர் ரஹ்மான் – கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் படம், இந்த மூவரின் திறமைகளை பார்க்கவே ஆவலாக ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடி வருகின்றனர் தமிழ் ரசிகர்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]