Home Cinema News ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ‘சைரன்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ‘சைரன்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

'ஜெயம்' ரவி, அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த 'சைரன்' படத்தை வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி பிரபல OTT தளமான 'டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்'ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

by Santhiya Lakshmi

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ‘ஜெயம்’ ரவி நடிப்பில் இந்த ஆண்டு (2024) பிப்ரவரி 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியான படம் ‘சைரன்’.

siren et00384518 1707388385

இந்த படத்தை அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருந்தார். இதில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் டூயட் பாடி ஆடியிருந்தார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், சாந்தினி தமிழரசன், யோகி பாபு, அழகம் பெருமாள், அஜய், துளசி, லல்லு மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார், சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்திருந்தார், செல்வக்குமார்.எஸ்.கே ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது, இந்த படத்தை வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.