பல ஆண்டுகளாக தன்னுடைய தனித்துவமான நடிப்பால், வித்தியாசமான கதைகளில் கதாநாயகனாக நடித்து, இளம் இயக்குனர்கள் முதல் கை தேர்ந்த திறமையாளர்களுடன் தமிழ் சினிமாவில் நடித்துவருபவர் நடிகர் ஜெயம் ரவி.
இவர் 2024ல் ஏற்கனவே ‘Siren’ என்ற படத்தில் நடித்து வெளியானது. இந்த படம் படுதோல்வி அடைந்ததும், இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிளவு ஆகியவற்றால் இவர் நடிப்பில் இருந்து சில மாதங்களாவது ஒய்வு எடுப்பார் என நினைத்தால், அதற்கு மாறாக கையில் என்ன முடியாத படங்களில் நடித்துவருகிறார்.
இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் உருவாக்கத்தில் உள்ள படங்கள் மட்டுமே அடுக்கடுக்காக இருக்கிறது. அப்படி தீபாவளி தொட்டு Jayam Ravi நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் பின்வருவன.
1. Brother (2024)

பிரபல இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிக்கும் படம் ‘Brother‘. இந்த படத்தின் கதை பற்றிய பெரிய தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இதுவரை வெளியான முன்னோட்டத்தில் இது ஒரு இயல்பான நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ளது தெறிக்கிறது. நடிகர் ஜெயம் ரவி உடைய 30 வது படமான இது, 2024 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. நகைச்சுவை படங்களில் இயல்பாகவே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறன் கொண்டதால், இந்த படம் தீபாவளிக்கு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
2. Genie (2024)

இளம் இயக்குனர்கள் பலருடன் இணைந்துள்ள நடிகர் ஜெயம் ரவி, இப்போது இயக்குனர் அர்ஜுனன் இயக்கம் ‘Genie’ படத்திலும் நடித்துள்ளார். Vels தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகிகள் கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்கள். சின்ஹட் அப்படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க விரைவில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. காதலிக்க நேரமில்லை (2025)
இயக்குனர் கிருத்திகா உதயநிதி உடன் முதல் முறை இணையும் நடிகர் ஜெயம் ரவி, ‘காதலிக்க நேரமில்லை’ என்ற காதல் படத்தில் நித்ய மேனன் கதாநாயகியாக நடிக்க படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் வினய், பானு, யோகி பாபு ஆகியோர் நடிக்க, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் உடைய இசையில் வெளியாகும். இந்த படத்தின் முதல் பாடலுக்கும் முன்னோட்டத்திற்கும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க, இந்த படம் 2025 காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
‘Dada’ இயக்குனருடன் JR 34 படத்தில் இணையும் நடிகர் ஜெயம் ரவி!
4. JR 34 (2025)
#JR34 💥 pic.twitter.com/pt41NYp9mz
— Jayam Ravi (@actor_jayamravi) October 5, 2024
Brother’ படத்தை தயாரிக்கும் Screen Scene Media நிறுவனம் மீண்டும் நடிகர் ஜெயம் ரவி கதஹநாயகனாக நடிக்கும் படத்தை உருவாக்கவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கணேஷ் K பாபு இயக்குகிறார், ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைக்கிறார். கணேஷ் K பாபு இதற்கு முன்னதாக ‘Dada’ படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என கூறினார் நடிகர் ஜெயம் ரவி.
Glad to collabore with @BTGUniversal 👍🏼 https://t.co/5peOCgAr6A
— Jayam Ravi (@actor_jayamravi) October 12, 2024
தன்னுடைய திருமண முறிவுக்கு பின் நடிகர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக தன்னுடைய அலுவலகத்தை மும்பையில் மாற்றியுள்ளது தெரியவந்த நிலையில் தமிழ் படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. இதற்கு விடையாக தொடர்ந்து பல படங்களில் இணைந்துள்ள இவர், அறிவிக்கப்படாத இன்னும் 3 படங்களில் சேர்ந்துள்ளதாக சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
இவரின் கை வசம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘தனி ஒருவன் 2’ மற்றும் ‘மிருதன் 2’ ஆகிய படங்களும் பேச்சு வார்த்தையில் இருப்பதாகவும், மும்பையில் இடமாற்றம் செய்ததால் ஹிந்தி மொழியிலும் இவருக்கான வாய்ப்புகள் தேடி வருகிறது என்றும் அவர் இந்த நேர்காணலில் கூறினார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]