Home Cinema News ஜீவா நடிக்கும் ‘Black’ படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

ஜீவா நடிக்கும் ‘Black’ படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

நடிகர் ஜீவாவின் அடுத்த படம் ஒரு ஹாரர் படமாக அமைந்துள்ளது. 'Black' என பெயரிடப்பட்டுஉள்ள படத்தின்  first look போஸ்டர் தற்போது வெளியாகிறது. 

by Vinodhini Kumar

நடிகர் ஜீவா அடுத்ததாக ஹாரர் பாணியில் நடிக்கும் திரைப்படம் தான் ‘Black’. இந்த படத்தை KG பாலசுப்ரமணி இயக்குகிறார். ஹாரர் படமாக அமையும் என்றவாறு வெளியாகியுள்ளது இந்த போஸ்டர். நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். 

Black movie first look poster

Time is Ticking…என்ற வாசகத்துடன் ஜீவா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் படத்தின் பெயரையும் First Look போஸ்ட்டரை வெளியிட்டார்கள் படக்குழுவினர். Potential ஸ்டுடியோஸ் LLP தயாரிப்பில், ‘Black’ என பெயரிடப்பட்டுள்ள இப்படதுக்கு இசையமைப்பாளர் சாம் C S இசையமைக்கிறார்.

இந்த படத்தை பற்றிய தகவல்களை படக்குழு வெளியிடவில்லை. ஆனால் செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரம், கைதி, தற்போது உருவாகிவரும் வேட்டையன் மற்றும் கூலி படங்களை எடிட் செய்யும் எடிட்டர் பிலோமின் ராஜ், ‘பிளாக்’ படத்தையும் எடிட் செய்கிறார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.