Home Cinema News கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா மற்றும் குடும்பத்தினர்!   

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா மற்றும் குடும்பத்தினர்!   

சேலம் செல்லும் வழியில் நடிகர் ஜீவா சென்றுகொண்டிருந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குளானது. 

by Vinodhini Kumar

 சென்னையிலிருந்து குடும்பத்துடன் சேலம் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புசுவரில் மோதி நடிகர் ஜீவா பயணித்த கார் விபத்துக்குள்ளான செய்தி வெளியாகியுள்ளது. தன்னுடைய குடும்பத்துடன் சென்னையிலிருந்து புறப்பட்ட நடிகர் Jiiva, கள்ளக்குறிச்சி அருகே இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலை தடுப்பில் கார் மோதியதாக தெரிகிறது.

Actor ஜீவா with his wife Supriya
Source: X (KollywoodTimes)

தமிழ் திரை துறையில் பிரபல நடிகரான Jiiva, குடும்பத்துடன் சேலம் செல்லும் போது கள்ளக்குறிச்சி அருகே திடீரென விபத்து ஏற்பட்டது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தததால், மோதாமல் தப்பிக்க சாலை தடுப்பில் மோதியுள்ளது. இந்த திடீர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் Jiiva மற்றும் குடும்பத்தினர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்கள். 

ஜீவா நடிக்கும் ‘Black’ படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாலும், காரில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படாததாலும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் Jiiva மற்றும் குடும்பத்தினர். இந்த சம்பவம் நடந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.