2024-ல் முதல் பாதியில் 10-க்கும் குறைவான படங்கள் மட்டுமே பெயர் சொல்லும்படி, ரசிகர்கள் ரசிக்கும்படியான படமாக இருந்தது. இரண்டாம் பாதியில் July மாதம் வெளியான படங்கள் பற்றிய ஒரு பார்வை.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை வகையில் பூர்த்தி செய்யும்படி ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2,3 படங்கள் ரிலீஸ் ஆகிவருகிறது. ஒரு சில படங்கள் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும்படியும், ஒரு சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யமல் சுமாரான அளவில் ரசிக்கப்படுகிறது.
இவ்வாறு 2024-ல் முதல் பாதியில் அரண்மனை 4, கருடன், மகாராஜா போன்ற படங்கள் ரசித்து கொண்டாடப்பட்டது. கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்கள் வசூலில் கலக்கியது.
முதல் பாதியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் இருந்து வந்த நிலையில் இரண்டாம் பாதியில் பெரிய ஹீரோக்கள் படங்கள் வரிசை கட்டி வரவுள்ளன. அந்தவகையில் July மாதத்தில் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்று பார்த்தல் கமலின் இந்தியன் 2, தனுஷின் ராயன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே.
July மாதம் 5-ஆம் தேதி (முதல் வாரத்தில்) 7/G, எமகாதகன், கவுண்டம்பாளையம், நானும் ஒரு அழகி, உதிர் @ பூமர கத்து போன்ற படங்கள் ரிலீஸ் ஆனது.
7/G, எமகாதகன், கவுண்டம்பாளையம்

7/G படத்தில் சோனியா அகர்வால் லீட் ரோலில் நடிக்க ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தை ஹாரூன் இயக்கத்தில், ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
எமகாதகன்

வட்டகர சதீஷ், கார்த்திக் ஸ்ரீராம், மனோஜ், ரஷ்மிதா ஆகியோர் நடித்து கிஷன் ராஜ் இயக்கத்தில் வெளியான படம் எமகாதகன். ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் படத்தில் அல்ஃபியா, இமான் அண்ணாச்சி, துரை மகேஷ் போன்றோரும் நடித்திருந்தனர்.
நானும் ஒரு அழகி, உதிர் @ பூமர காத்து
கே. அருண், ஜெ. மேக்னா, எஸ். ராஜதுரை, கே. பொழிக்கராயன் ஆகியோர் நடிப்பில் பொழிக்கராயன் K இயக்கத்தில், KC. கிரியேஷன் தயாரிப்பில் வெளியான படம் நானும் ஒரு அழகி. சந்தோஷ் சரவணன், சிங்கம்புலி, தேவதர்ஷினி, மனோபாலா நடிப்பில் ஞான ஆரோக்கியராஜ் இயக்கத்தில் வெளியான படம் உதிர் @ பூமர காத்து. இந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறியது.

இந்தியன் 2

கமல், சங்கர் கூட்டணியில் 28 வருடங்களுக்கு முன்பு வந்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக “இந்தியன் தாத்தா” கேரக்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. கமல் ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், SJ . சூர்யா, ராகுல் ப்ரீத் சிங்க், பாபி சிம்கா, சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம் போன்றோர் நடித்திருந்தனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வெளியிட்டனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனம் பெற்றது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா என்று சொல்லப்போனால் முழுவதுமாக நிறைவேற்றவில்லை என்றுதான் கூற வேண்டும்.
டீன்ஸ், ஆர்.கே.வெள்ளிமேகம்
பார்த்திபனின் வித்தியாசமான கதையில் டீன்ஸ் படம் அதே நாளில் வெளியானது. ஆர்.பார்த்திபன், யோகி பாபு, சுபிக்ஷா கிருஷ்ணன், கிருத்திகா ஐயர் ஆகியோர் நடிப்பில், D. இமான் இசையில், பயோஸ்கோப் ட்ரீம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது. சுமாரான வரவேற்பை பெற்றது.

விஜய் கௌரிஷ், ரூபேஸ்வரன் பாபு, விசித்திரன், சார்மிளா நடிப்பில், சைனு சாவக்கடன் இயக்கத்தில் வெளியான படம் ஆர்.கே.வெள்ளிமேகம். July 12-ஆம் தேதி கமலின் இந்தியன் 2, பார்த்திபனின் டீன்ஸ், ஆர்.கே.வெள்ளிமேகம் போன்ற படங்கள் ரிலீஸ் ஆனது.
மாயா புத்தகம், திமில்
July 19-ஆம் தேதி மாயா புத்தகம், திமில் ஆகிய படங்கள் வெளியானது. ராமா ஜெயபிரகாஷ் இயக்கத்தில், அசோக்குமார், ஸ்ரீகாந்த், அபர்நதி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில், ஜாகுவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான படம் மாயா புத்தகம்.
S. காதர் இயக்கத்தில், தமிழன் சினிமாஸ் தயாரிப்பில், மகேஷ், மனிஷாஜித், அருண் மொழி வர்மன், கனி போன்றோர் நடித்து வெளியான படம் திமில்.
பிதா 23:23

July 26-ல் ராயன் மற்றும் பிதா 23:23 ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. எஸ்.சுகன் குமார் இயக்கத்தில், ஆதேஷ் பாலா, அனு கிருஷ்ணா, ரீஹானா பேகம், சாம்ஸ் ஆகியோர் நடிப்பில், SR. பிலிம் பேக்ட்ரி தயாரிப்பில் வெளியான படம் பிதா 23:23.
ராயன்

இந்த ஆண்டில் இரண்டாம் பாதியில் ரசிகர்கள் கொண்டாடியும், வசூலில் கலக்கிய படம் என்றால் ராயன் மட்டுமே. தனுஷ் இயக்கி, நடித்த படம். மேலும் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடித்திருந்தனர். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 5 நாட்களிலேயே 75 கோடி வரை வசூல் செய்து கலக்கி வருகிறது.
அண்ணன், தங்கை கதையை கொண்டு ரசிக்கும் படியான கதைக்களத்தையும், பாடல்களையும் தந்து அசத்தியுள்ளார் படக்குழு.
July மாதத்தில் 12 படங்கள் வந்த நிலையில் இரண்டு படங்கள் மட்டுமே பெயர் சொல்லும் படியான வரவேற்பை பெற்றது.
இந்த ஆண்டின் ஜூலை மாதத்திற்கான படங்கள் லிஸ்ட்.
படங்கள் | வெளியான தேதி | நடிகர்கள் | இயக்குனர்கள்/ தயாரிப்பாளர்கள் |
7/G | ஜூலை 5, 2024 | சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா | ஹாரூன் / ட்ரீம் ஹவுஸ் |
எமகாதகன் | ஜூலை 5, 2024 | வட்டகர சதீஷ், கார்த்திக் ஸ்ரீராம், மனோஜ், ரஷ்மிதா | கிஷன் ராஜ் / பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ். |
கவுண்டம்பாளையம் | ஜூலை 5, 2024 | ரஞ்சித், அல்ஃபியா, இமான் அண்ணாச்சி, துரை மகேஷ் | ரஞ்சித் / ஸ்ரீ பாசத்தை மூவிஸ் |
நானும் ஒரு அழகி | ஜூலை 5, 2024 | கே.அருண், ஜெ.மேக்னா, எஸ்.ராஜதுரை, கே.பொழிக்கராயன் | பொழிக்கராயன் K / KC. கிரேஷன்ஸ் |
உதிர் @ பூமர காத்து | ஜூலை 5, 2024 | சந்தோஷ் சரவணன், சிங்கம்புலி, தேவதர்ஷினி, மனோபாலா | ஞான ஆரோக்கியராஜ் / ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் |
இந்தியன் 2 | ஜூலை 12, 2024 | கமல் ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், SJ . சூர்யா, ராகுல் ப்ரீத் சிங்க், பாபி சிம்கா, சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம் | சங்கர் / லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் |
டீன்ஸ் | ஜூலை 12, 2024 | ஆர்.பார்த்திபன், யோகி பாபு, சுபிக்ஷா கிருஷ்ணன், கிருத்திகா ஐயர் | ஆர்.பார்த்திபன் / பயோஸ்கோப் ட்ரீம்ஸ் மற்றும் அக்கிரா ப்ரோடுக்சன் |
ஆர்.கே.வெள்ளிமேகம். | ஜூலை 12 , 2024 | விஜய் கௌரிஷ், ரூபேஸ்வரன் பாபு, விசித்திரன், சார்மிளா | சைனு சாவக்கடன் / சந்துருசுதா பிலிம்ஸ் |
மாயா புத்தகம், | ஜூலை 19 , 2024 | அசோக்குமார், ஸ்ரீகாந்த், அபர்நதி, ஆடுகளம் நரேன் | ராமா ஜெயபிரகாஷ் / ஜாகுவார் ஸ்டுடியோஸ் |
திமில் | ஜூலை 19 , 2024 | மகேஷ், மனிஷாஜித், அருண் மொழி வர்மன், கனி | S. காதர் / தமிழன் சினிமாஸ் |
ராயன் | ஜூலை 26 , 2024 | தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் | தனுஷ் / சன் பிக்ச்சர்ஸ் |
பிதா 23:23 | ஜூலை 26 , 2024 | ஆதேஷ் பாலா, அனு கிருஷ்ணா, ரீஹானா பேகம், சாம்ஸ் | எஸ்.சுகன் குமார் / SR. பிலிம் பேக்ட்ரி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]