7/G (ஜூலை 5)
Here is Title Look of 7/G#7G #7GtitleLook #7Gmovie@Haroon_FC @soniya_agg @smruthi_venkat @sidvipin @DirectorS_Shiva #SnehaGupta #Roshan @biju_v_donbosco #KannanDop @Lyricist_Mohan @KskSelvaPRO @dineshashok_13 @teamaimpr pic.twitter.com/10jftKElHB
— haroon.dh (@Haroon_FC) August 21, 2023
சோனியா அகர்வால், ஸ்முருதி வெங்கட், சித்தார்த் விபின், ஸ்வேதா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜ் நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படம் 7/G. ஹாரூன் அவர்கள் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இவர் ‘இதற்கு தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா‘, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எமகாதகன் (ஜூலை 5)
#Emagadhagan TRAILER OUT NOW! Click play to witness sheer energy!🔥https://t.co/IwiGVCyEO0 pic.twitter.com/1Pnf9hXxmO
— Zee Music South (@zeemusicsouth) November 30, 2023
கிஷன் ராஜ் இயக்கத்தில் வட்டகார சதீஷ், கார்த்திக் ஸ்ரீராம், மனோஜ், ரஷ்மிதா நடித்துள்ள படம் ‘எமகாதகன்’. ப்ரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம். விக்னேஷ் ராஜா இசையமைக்கிறார்.
கவுண்டம்பாளையம் (ஜூலை 5)

நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் ‘கவுண்டம்பாளையம்’. சாதி, காதல் கல்யாணம் ஆகிய கதையை பற்றி பேசும் படமாக அமைந்தது. ரஞ்சித், ஆல்ஃபியா, இமான் அண்ணாச்சி, துரை மகேஷ் நடித்திருக்கும் படம். ஸ்ரீ பார்த்தாய் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்த வாரம் வெளியாகிறது.
கருடன் (ஜூலை 3) OTT

2024ல் ஆக்ஷன் படமாக வெளியாகி, ஹிட்டான படம் ‘கருடன்’. வெற்றிமாறன் எழுதிய கதையில் R.S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடித்துள்ளனர். ரோஷினி ஹரிப்ரியன், ஷிவதா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி துணை நடிகர்களாக நடித்துள்ளனர். நண்பர்களுக்குள் நடக்கும் பிளவுகளால் அவர்களின் நட்புக்கும், விசுவாசத்திற்கும் உண்டாகும் சோதனை தான் கதை. இது ஜூலை 3ம் தேதி ஆமெசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]