Home Cinema News ஜூன் 21, 22 வெளியாகும் தமிழ் படங்கள்! 

ஜூன் 21, 22 வெளியாகும் தமிழ் படங்கள்! 

தமிழில் வெளிவரும் இந்த படங்களை ஜூன் 21,22 காணத்தவறாதீர்கள்!

by Vinodhini Kumar

ஜூன் 21 

ரயில் 

Rail Movie- ஜூன் 21

தமிழ்நாட்டில் தஞ்சம் பிழைக்க வந்து, கிடைத்த வேலைகளை செய்யும் லட்சக்கணக்கான வடமாநிலத்தவரை போல், ஒரு கிராமத்தில் வேலை செய்கிறார் ஒருவர். அங்கு அவர் சந்திக்கும் மனிதர்களும், அதிலும் முக்கியமாக ஒரு கல்யாணமான பெண்ணும் அவளின் கணவருக்கும் நடக்கும் பிரச்சனைக்கும் இவர் எப்படி நுழைந்தார் என்பது தான் கதை. குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மேரு, ஷமீரா ஆகியோர் நடித்துள்ள படத்தை பாஸ்கர் சக்தி இயக்கி உள்ளார். தயாரிப்பு- M. வேடியப்பன், ஒளிப்பதிவு- தேனி ஈஸ்வரன், இசை- S.J. ஜனனி, எடிட்டிங் – நாகூரன் ராமச்சந்திரன். 

அரண்மனை 4 (OTT) 

Aranmanai 4

2024ல் தமிழா சினிமாவின் முதல் ப்ளாக் பஸ்டர் படம். சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4. தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப் என பலர் நடித்துள்ளார்கள். வழக்கறிஞ்கரான சுந்தர் சி, தனது தங்கை தமன்னா தற்கொலை செய்துகொண்டதாகவும், தங்கையின் கணவன் சந்தோஷ் பிரதாப்பும் மர்மமான முறையில் இறந்ததால், அவர்களின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள செல்கிறார். அங்கு பேயை எப்படி விரட்டுகிறார் என்பது தான் கதை. இந்த படம் OTTயில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 21 வெளியாகிறது‌. 

ரசவாதி (OTT) 

Rasavathi in Amazon prime

அர்ஜுன் தாஸ், டாண்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், G.M. சுந்தர், சுஜாதா ஆகியோர் நடித்துள்ள படம். சாந்த குமார் இயக்கி உள்ளார். ஒரு மனிதனின் வாழ்க்கையை மூன்று வெவ்வேறு காலக்கட்டத்தில் பேசும் படம். தமன் இசையில் ஆக்ஷன் படமாக வெளியானது. இப்போது இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலும் ஆஹா தளத்திலும் வெளியாகிறது. 

ஜூன் 22 ( Re release படங்கள்) 

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 22ம் தேதி கமலா சினிமாஸில் அவர் நடித்த ஆறு படங்கள் வெளியாகிறது. 

Kaththi re release poster
  • கத்தி
  • மாஸ்டர்
  • மெர்சல்
  • போக்கிரி
  • கில்லி (விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷல் டிக்கெட் விலை) 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.