British Film Institute என்பது லண்டனில் புகழ் பெற்ற பிலிம் இன்ஸ்டியூட். இந்த பிலிம் இன்ஸ்டியூட் 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் வெளியிட்டதில் “Kaala” படமும் ஒன்று.
பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டியூட் உலகின் மிகப்பெரிய திரைப்பட காப்பகமாக லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. 1933-ஆம் ஆண்டு முதல் 90 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக இயங்கி வருகிறது.
உலக அளவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்பதிலும், கண்காணிப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறை சார்ந்த பல்வேறு பட்டப் படிப்புகளை இங்கு பயின்று வருகின்றனர்.

இந்த இன்ஸ்டியூட்டுக்கு சொந்தமான மாத இதழான sight and sound இந்த நூற்றாண்டின் தலைசிறந்த 25 படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த 25 படங்களில் இந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அது ரஜினி நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான “காலா” திரைப்படம்.
கபாலி படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித், ரஜினிகாந்த் கூட்டணில் மீண்டும் இணைந்த படம் “காலா”. மும்பை தாராவியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியில் செய்யும் போது அங்கு எழும் பிரச்சனையை மையப்படுத்திய படம்.
பல நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளன நிலையில் படம் பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரசிக்கும் படியாக இருந்தது.
காலா திரைப்படம் பணக்காரர்களின் அதிகாரம் மற்றும் அவர்களுக்கான அரசியல், சமூக நீதி போன்றவற்றை பற்றிய கதையாகும். மும்பையின் தாராவி பகுதியில் வாழும் மக்களின் குரலாக கரிகாலன் என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, மணிகண்டன், பங்கஜ் திரிபாதி, அஞ்சலி பாட்டீல், திலீபன், சம்பத் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தயாரிப்பாளராக தனுஷ் மற்றும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இந்த படத்துடன் இணைந்திருந்தார்.
“இது காலா கில்லா”, “கியாரே செட்டிங் ஆ, வேங்கை மவன் ஒத்தைல நிக்க தில் இருந்தா மொத்தமா வாங்கடா” என்று ரஜினிகாந்த் கூறும் மாஸ் டயலாக் ரஜினிகாந்த் என்றும் “சூப்பர் ஸ்டார்” தான் என்று நினைவு படுத்தியது.
வேறு சில படங்களான ஓல்ட் பாய், ஹிஸ்டரி ஆஃப் பைனான்ஸ், இன்லேண்ட் எம்பயர், பார்ப்பாரா, பிரைட்ஸ் மேட்ஸ், அன்ரிலேடட், விண்டோ போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் இடம் பெற்ற ஒரே இந்திய தமிழ் படம் காலா என படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]