முன்னனணி நாயகர்களாக நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ராணா தகுபதி இணைந்து நடிக்கவுள்ள “Kaantha” படத்தின் update வெளியானது. “The Hunt for Veerappan” என்ற வெப் தொடரை இயக்கிய செல்வமணி செல்வராஜ் அவரது அடுத்த படத்தின் பூஜை இன்று ஹைதெராபாதில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோஸில் நடைபெற்று முடிந்தது. இதில் கதாநாயகியாக “Mr.பச்சன்” என்ற படத்தின் மூலியமாக தெலுங்கில் அறிமுகமான பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ளார். இவர்களோடு நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
“காந்தா” திரைப்படம் 1950-களில் உள்ள மெட்ராஸில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என்றும், அதே காலகட்டத்தில் வாழும் கதாபாத்திரங்களும் உறவு, உணர்ச்சி மற்றும் சமூக மாற்றங்களை சித்தரிக்கும் விதமாக இந்த படத்தின் கதை இருக்கும் என்று இயக்குனர் செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தை சுரேஷ் ப்ரோடுக்ஷன்ஸின் ஒரு பிரிவான நடிகர் ராணாவின் Spirit Media மற்றும் துல்கர் சல்மானின் Wayfarer Films இனைந்து தயாரிக்க உள்ளது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ் படமாகும்.
Introducing #KAANTHA, an epic collaboration with my friend @dulQuer !@SpiritMediaIN and @DQsWayfarerFilm brings to you a story that blends artistic storytelling and innovative filmmaking.
— Rana Daggubati (@RanaDaggubati) September 9, 2024
Puja completed, can’t wait to start rolling ♥️🔥 pic.twitter.com/U8hZhBEm8u
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]