Home Cinema News Hiphop தமிழா ஆதியின் ‘கடைசி உலக போர்’ படத்தின் ‘Boombastic’ பாடல் வெளியானது!

Hiphop தமிழா ஆதியின் ‘கடைசி உலக போர்’ படத்தின் ‘Boombastic’ பாடல் வெளியானது!

இசையமைப்பாளர் Hiphop தமிழா ஆதி இயக்கம் 'கடைசி உலக போர்' படத்தின் அதிரடியான 'Boombastic' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

இளைஞர்கள் மத்தியில் இந்த வலைத்தளங்கள் வருவதற்கு முன்னரே தன்னுடைய Independent இசை ஆல்பம் பாடல்களால் பிரபலமானவர் Hiphop தமிழா ஆதி. அவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் தானே படம் இயக்கி ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். 

அவரின் அடுத்த படம் ‘கடைசி உலக போர்’ படத்தின் ‘Boombastic’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தானே எழுதி பாடியுள்ளார் Hiphop தமிழா ஆதி அவர்கள். தன்னுடைய தனித்துவமான சட்டியில் ஒரு துள்ளலான Rap பாடலாக வெளியாகியுள்ளது இந்த பாடல்.

இதில் இவருடன் பிரபல நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு அவர்களும் பாடியுள்ளார். மேலும் பாடகர் ராஜன் செல்லையா இந்த பாடலை இணைந்து எழுதி பாடியும் உள்ளார். 

Hiphop தமிழா ஆதி in Kadaisi Ulaga Por

இந்த பாடலுக்கு புகழ்பெற்ற நடன கலைஞர் கல்யாண் மாஸ்டர் choreography செய்துள்ளார். இந்த பாடலை படத்தில் நடித்துள்ள நடிகர்களுடன் சேர்ந்து கலக்கலான ஒரு விடியோவாக தொகுத்து வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிகர் ஆதி, நடிகர்கள் நாசர், (நட்டி) நடராஜன், சிங்கம்புலி, முனீஷ்காந்த், சிங்கம்பெருமாள், இளங்கோ குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர். 

Hiphop Tamizha Adhi நடிக்கும் ‘கடைசி உலகப்போர்’!

‘கடைசி உலக போர்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் ஏற்கனவே ஜோடி சேர்ந்த நடிகை அனகா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘நட்பே துணை’ படத்தில் நடித்தார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.