இசையமைப்பாளராக அறிமுகமாகி, பிறகு கதாநாயகனாகவும், இயக்குனராகவும் வெற்றிகரமாக தனக்கென தனி இடத்தை திரை துறையில் உருவாகியுள்ளனர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவர் அடுத்ததாக இயக்கியுள்ள ‘கடைசி உலகப் போர்‘ படத்தை முதல் முறையாக தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் கொண்டு வெளியிடவுள்ளார்.

எதிர்கால போர் சூழ்ந்த கதைக்களத்தில், ‘கடைசி உலகப் போர்’ படம் முற்றிலும் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. 2028ம் ஆண்டில் நடக்கும் இந்த கதையை விவரிக்கும் விதமாக வெளியாகியுள்ளது இப்படத்தின் ட்ரைலர்.
‘கடைசி உலகப் போர்’ படத்தின் கதை ரஷ்யா, சீனா போன்ற 72 நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருந்து விலகி ‘Republic’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகவும் அதனால் ஆரம்பமாகும் போர் பற்றிய கதையில் நகரம் முழுவதும் குண்டு வெடிப்புகள் நடப்பதை காட்டுகிறது இந்த ட்ரைலர்.
நட்டி நடராஜன் கதையின் சூழலையும், கதாநாயகி அனகா ஒரு அரசியல் கட்சி தலைவியாக இருப்பதையும் விவரிக்கிறார். இதில் நடிகர் ஆதி ‘தமிழரசன்’ என்ற பாத்திரத்தில் அரசாங்கத்தையே, நடக்கும் அரசியலையே எதிர்ப்பது போல காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே ‘நட்பே துணை’ படத்தில் இணைந்து நடித்த அனகா – ஹிப் ஹாப் ஆதி, இந்த முறை ஒரு ஆக்ஷன் படத்தில் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளனர். ‘கடைசி உலகப் போர்’ படத்தில் நடிகர் நாசர், நட்டி நடராஜன், சிங்கம் புலி, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ் காந்த், கல்யாண் மாஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Hiphop தமிழா ஆதியின் ‘கடைசி உலக போர்’ படத்தின் ‘Boombastic’ பாடல் வெளியானது!
ஹிப் ஹாப் ஆதி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா, எடிட்டர் பிரதீப் ராகவ், காலை இயக்குனர் ஆர் கே நாகு, சண்டை இயக்குனர் மகேஷ் மாத்தியூஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்த படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]