2025 பொங்கலுக்கு பல விதமான திரைக்கதையில் உருவான ஆக்ஷன், டிராமா, காமெடி, ரொமான்டிக் திரைப்படங்கள் திரையரங்கில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதன் வரிசையில் உள்ள இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் romcom திரைப்படம் தான் “Kadhalikka Neramillai”. இந்த படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் இன்று வெளியானது.
Kadhalikka Neramillai – கலாட்டா நிறைந்த ட்ரைலர்!
பொதுவாக rom com திரைப்படங்களின் பல காட்சிகள் யூகிக்கும் வண்ணம் இருந்தாலும், அதில் நடிக்கும் நடிகர்கள், காதல் காட்சிகளை மக்களுக்கு காண்பிக்கும் விதம், மற்றும் பார்வையாளர்களின் உணர்ச்சியுடன் கலப்பது போன்ற முக்கிய கூறுகள் உள்ள பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக ஆகிறது. அதே போல், இன்று வெளியாகி உள்ள “Kadhalikka Neramillai” ட்ரைலரில் இந்த முக்கியமான கூறுகள் அமைந்துள்ளன. டிரைலரின் ஆரம்பத்தில் ஷ்ரியா (படத்தின் நாயகி) கருவுற்று இருக்கும் நிலையில் அதன் தந்தை யார் என்ற கேள்வியோடு தேடலில் இறங்குகிறாள். அப்போது அவள் முன்னாள் காதலன் சித் மற்றும் சித்தின் எக்ஸ் காதலியாக TJ பானு என அனைவரும் அவரின் வாழ்வில் நுழைய இறுதியில் இந்த குழப்பம் நிறைந்த காதல் கதையின் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்ற குழப்பத்துடன் அமைந்துள்ளது ட்ரைலர்.
AR ரஹ்மானின் ஈர்க்கும் துள்ளல் இசை, கவேமிக்கின் வண்ணங்கள் நிறைந்த ரிச்சான ஒளிப்பதிவு இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பீல் குட் திரைப்படங்களை விரும்பும் ரசிகர் கூட்டத்தின் முதல் தேர்வாக இந்த படம் நிச்சயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் – கிருத்திகா உதயநிதி
வெளியாகும் நாள் – ஜனவரி 14, 2025
A love story ready to take you on a roller coaster ride of love, emotion and joy 💖✨
— Red Giant Movies (@RedGiantMovies_) January 7, 2025
The most-anticipated #KadhalikkaNeramillai Trailer is out now. ▶️ https://t.co/dHjfvFBs1i
In cinemas on January 14th
An @arrahman musical 🎶@actor_jayamravi @MenenNithya @astrokiru… pic.twitter.com/akKMlTCfk5