Home Cinema News பிரபாஸ் நடிக்கும் KALKI 2898 AD படத்தின் டிரெய்லர் விரைவில்!

பிரபாஸ் நடிக்கும் KALKI 2898 AD படத்தின் டிரெய்லர் விரைவில்!

by Vinodhini Kumar

பிரம்மாண்ட சைன்டிஃபிக் படமாக உருவாகும் KALKI 2898 AD. ஜூன் 10 வெளியாகும் டிரெய்லர். 

KALKI 2898 AD படம் 2024ன் அதிகம் எதிர்பார்க்கபடும் பிரம்மாண்ட சை- ஃபை படமாகும். இளம் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலக நாயகன் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார், நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் தீஷா பாட்னி முக்கிய வேடங்களில் நடிப்பதும் அறிவிக்கப்பட்டது. 

KALKI 2898 cast

இயக்குனர் நாக் அஸ்வினின் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம், 600 கோடியில் 2020ல் KALKI 2898 AD படத்தின் முதல் அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட படம், படப்பிடிப்பு தொடங்கி இந்த வருடம் மே 9ல் வெளியாகும் என்ற பேச்சு வந்தது. தேர்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது அதிகாரபூர்வமாக ஜூன் 10 படத்தின் டிரெய்லர் வெளியாகும் என‌ படக்குழு அறிவித்துள்ளது. ஜூலை 12 படம் வெளியாகும் என்றும் தெரிகிறது. 

KALKI 2898 AD movie promotion

பெரிய எதிர்ப்பார்ப்புடன் உருவாகும் இந்த படத்தின் இசை- சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – ஜோர்ஜே ஷ்டோஜொல்காவிக் என்ற செர்பிய கலைஞர். கடந்த ஆண்டு நடிகர் பிரபாஸை வைத்து சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதற்கு கிடைத்த வரவேற்பை தாண்டிய ஆவல் விரைவில் வெளியாகும் டிரெய்லருக்கு இருக்கிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.