Home Cinema News Kalki 2898 AD ட்ரெய்லரில் என்ன ஸ்பெஷல்?!

Kalki 2898 AD ட்ரெய்லரில் என்ன ஸ்பெஷல்?!

Kalki 2898 AD’  படம் வரும் ஜூன் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

by Santhiya Lakshmi

இந்த உலகத்தின் முதல் நகரம் எனும் கதாசிரியரின் குரலும், இந்த உலகத்தின் கடைசி நகரம் காசி எனும் சிறுவனின் குரலும் கலந்து தொடங்குகிறது ​​’Kalki 2898 AD’ படத்தின் ட்ரெய்லர். நாக் அஷ்வின் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் Kalki 2898 AD  படத்தின் ட்ரெய்லர் நேற்று யு-ட்யூபில் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. 

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், தியா பட்டானி, பசுபதி எனப்பலரும் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லரில் என்ன ஸ்பெஷல்?!

விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் எனச்சொல்லப்படும் ‘கல்கி’ உருவெடுத்து வர, அவர் உருவெடுக்கக் கூடாது என நினைக்கும் வில்லன்கள் அந்த அவதாரத்தைக் கருவிலேயே அழிக்க நினைக்கிறார்கள். அந்த கருவை சுமப்பவள் தீபிகா படுகோன். அந்த கரு அழியாமல் காக்கும் பொறுப்பு அமிதாப் பச்சன் உடையது. தீபிகா படுகோனை தூக்கி வரும் பொறுப்பை வில்லன்கள் பிரபாஸிடம் கொடுக்க, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் பிரபாஸ் குழந்தையை அழித்தாரா, காத்தாரா என்பதைத்தான் இந்த 3 நிமிட ட்ரெய்லர் அதிரடி கிராஃபிக்ஸும், மிரட்டலான இசையையும் கலந்துசொல்கிறது.

ட்ரெய்லரில் ஒரு சில விநாடிகள் மட்டுமே கமல்ஹாசனின் முகம் காட்டப்படுகிறது. ‘’பயப்படாதே… புது பிரபஞ்சம் வந்துகிட்டு இருக்கு’’ என தீபிகாவின் காதுகளில் ரகசியமாக சொல்லும் கமல்ஹாசனின் கதாபாத்திரம் என்ன என்பது இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
Kalki 2898 AD’  படம் வரும் ஜூன் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.