Kalki 2898 AD படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சைன்ஸ் ஃபிக்ஷன் கலந்த ஒரு ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ள Kalki, மதம் மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்தின் கலவையை மூன்று மணி நேர திரைக்கதையாக உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே ராமாயணத்தை வைத்து பல படங்கள் எடுத்து அவை ரசிகர்கள் மத்தியில் வெற்றியடையாமல் இருந்த நிலையில், மாபெரும் பட்ஜெட்டில் மகாபாரத இதிகாசத்தின் பெரும் பகுதியை கதையின் அடித்தளமாக எடுத்திருப்பது இயக்குனர் நாக் அஸ்வினின் துணிச்சலான செயல்.
2898 AD என்ற ஆண்டில் யூனிட்ஸ் (units) அதாவது பணம் மாதிரியான எதிர்கால மதிப்பீடு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என பிரிவினையில் அமைந்த உலகில் கதை தொடங்குகிறது. காசி நகரில் காத்து கூட சுவாசிக்க முடியாமல் தண்ணீர் பஞ்சத்தில் யூனிட்ஸ் இல்லாமல் தவிக்கும் மக்கள், மண்ணில் இருந்து அணைத்து இயற்கையான சத்துக்களையும் உரிந்து complex என்ற தனிப்பட்ட நகரம் என பாக் பிரிவினையில் கதைக்களம் அமைந்துள்ளது.

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் Kalki 2898 AD படத்தில் அஸ்வத்தாமன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். தனக்கே உரித்தான கம்பீரமான நடிப்பும் திரையில் அவரின் ஆளுமையையும் ஒவ்வொரு காட்சியிலும் மிக எளிதாக காட்டியுள்ளார். அமிதாப் பச்சனின் திரை அனுபவமும், சண்டை காட்சிகளில் அவரின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. அஸ்வத்தாமன் யார்? அவரின் விதி என்ன? என்ற கேள்விகளுக்கான பதிலை அவரின் துள்ளியமான நடிப்பால் ரசிகர்களுக்கு விலக்கினார். இந்தியாவின் முன்னணி நடிகராகவும் பாலிவுட்டின் நிரந்தர சூப்பர் ஸ்டாராக அவர் இருப்பதன் காரணத்தை கல்கி படத்தில் மற்றுமொரு முறை நிரூபித்துள்ளார்.

கமல் ஹாசன் Supreme யாஸ்கின் என்ற பாத்திரத்தில் மிக குறைந்த காட்சிகளில் வந்தாலும் அவரின் தெளிந்த வசனங்களாலும், நடிப்பாலும் தியேட்டரில் உள்ள அனைவரின் கவனத்தையும் திரையில் ஈர்க்கிறார். இரண்டாம் பாதியில் அவரின் காட்சி இரண்டாம் பாகத்திற்கு துளிராக அமைகிறது.

தீபிகா படுகோன் உடைய கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் படத்தின் துடுப்பாக எழுதப்பட்டுள்ளது, ஆனால் திரையில் அவருக்கான காட்சிகளில் வசனமில்லாமல் உணர்வுகளை மட்டும் கடத்த முயன்று பாதி படத்தில் அவருக்கான பங்கு காணாமல் போயிருக்கிறது. இருப்பினும் கடவுளின் அவதாரமாக, எதிர்கால உலகின் காப்பாளரை சுமக்கும் பெண்ணாக நடித்து சில காட்சிகளில் உணர்ச்சிகளை நன்றாக நடத்தியுள்ளார்.

பைரவா என்ற கதாப்பாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளார் நடிகர் பிரபாஸ். அவரின் ரசிகர்களுக்காகவே எழுதப்பட்ட பஞ்ச் வசனங்கள் தெலுங்கு மக்களுக்கு ஒத்துப்போகும் என்றாலும் sub titles இல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங்கில் அதன் சாராம்சம் தென்படவில்லை. நடிகர் பிரபாஸ் சீரியஸான ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால், Kalki படத்தின் முதல் பாதியில் நக்கலான, எதற்கும் அஞ்சாத இளைஞனாக வலம் வந்தது அவனின் ரசிகர்களுக்கு புதிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. புஜ்ஜி என்ற தொழில்நுட்ப வல்லமை கொண்ட ஒரு வாகனத்தின் துணையுடன் 10 லட்சம் யூனிட்டை திரட்டி எப்படியாவது அடுத்தக்கட்ட வசதியான நகரமான complexக்கு உள்ளே நுழைவதை குறிக்கோளாக வைத்திருப்பவர். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் தான் அதிகம் திரையில் வருபவர். படத்தின் முக்கிய பாத்திரமாக க்ளைமாக்ஸ் வரை தொடரும் பிரபாஸ், முதல் பாதியில் நீண்ட சண்டை காட்சிகளிலும், சரியாக எழுதப்படாத நகைச்சுவை காட்சிகளிலும் ஆடியன்ஸ் கவனத்தை ஈர்க்க தவறுகிறார். அதிலும் பைரவா (பிரபாஸ்) மற்றும் புஜ்ஜிக்கு இடையே நீண்ட வசனங்கள் வைத்ததன் பின்னணி, ஆடியன்ஸுக்கு படத்தில் வரும் தொழில்நுட்பத்தை விலக்குவது என்றாலும் அதில் நகைச்சுவை சுத்தமாக ஒன்றவில்லை என்பது பின்னடைவு.
சந்தோஷ் நாராயணன் இசையில் அஸ்வத்தாமன் மற்றும் சுப்ரீம் யாஸ்கின் பாத்தினங்களின் பின்னணி இசை சிலிர்க்க வைத்தாலும், பைரவா பாத்திரத்தின் பின்னணி இசையின் அதிக பயன்பாடும், சற்றும் தொடர்பில்லாத எடிட்டிங்காலும் பல இடங்களில் இசையமைப்பாளரின் திறமையை இந்த பிரம்மாண்ட கதைக்கு முழுதாக பயன்படுத்தாமல் இருந்ததாக தெரிகிறது.
Kalki 2898 AD படத்தின் பலம்
Kalki 2898 AD படத்தின் மாபெரும் பலம் இதில் பயன்படுத்திய VFX மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள். முதல் பாதியில் பல இடங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளில் அசட்டு தன்மை தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் ஷம்பாலா மற்றும் complexன் காட்சிகளில் VFX நுட்பத்தை பிரம்மாண்டமாக பயன்படுத்தியுள்ளது படக்குழு. அதிலும் அமிதாப் பச்சன் மற்றும் பிரபாஸ் இடையே இருந்த சண்டை காட்சிகளில் அதிரடியான கிராஃபிக்ஸ் வேலைகளால் ஆடியன்ஸ் ஈர்க்கபட்டனர்.
Kalki 2898 AD படத்தின் பின்னடைவு
பாரதப் போரின் முடிவு முதல் 2898 AD வருடம் வரை அஸ்வத்தாமனின் காத்திருப்பின் காரணம் என படத்தின் கதையை தொடங்கிய இயக்குனர் நாக் அஸ்வின், முதல் பாதியில் இன்னும் சற்று விரிவாக இதிகாசத்தையோ, எதிர்காலத்தில் காசி நகரின் நிலை பற்றியோ விரிவாக செல்லியிருக்கலாம். முதல் பாதியில் பல காட்சிகளில் கதையுடன் தொடர்ச்சி இல்லாததும், complex என்ற நகரின் பிரம்மாண்டத்தை ஒரு கமர்ஷியல் பாடல் வழியாக கூறியது படத்தின் கதையில் இருந்து முற்றிலும் விலகியிருந்தது. ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு தொடர்பில்லாமல் மாறுவது பார்ப்பவர்களுக்கு கதையை புரிந்துக் கொள்ள கடினமாக இருந்தது.
படத்தில் துணை நடிகர் சஸ்வதா சாட்டர்ஜியின் நடிப்பு வில்லதனமாக எழுதப்பட்டிருந்தாலும் திரையில் தோன்றும்போது அது தெரியாதது பின்னடைவு. மற்ற துணை நடிகர்களான ஷோபனா, பசுபதி, ஆனா பென் தங்களின் பாத்தினங்களுக்கு கச்சிதமாக பொருந்தினர். தீஷா பாட்னி படத்தில் தேவையில்லாத காதல் காட்சிக்கும் சம்மந்தமில்லாத பாடலுக்கு மட்டும் உபயோகித்து படத்துக்கு பலவீனமாக அமைந்துள்ளது. இயக்குனர் நாக் அஸ்வின் சில பிரபல நடிகர்களையும் சினிமா பிரபலங்களை cameoவாக சேர்த்துள்ளது சின்ன சர்ப்ரைஸாக அமையும். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதிகாச கதையை திரைப்படமாக எடுப்பது எளிதானது இல்லை, அதிலும் இந்தியாவின் முன்னணி நடிகர்களை கொண்டு production வேலைகளில் தனி உழைப்பை சேர்த்து எடுத்துள்ள Kalki 2898 AD படம் ஒரு என்டர்டெயின்மென்ட் ப்ளாக் பஸ்டர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]